இறுதிப் போரின் பின்னரும் உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணினிப் பிரிவுப் பெண் போராளி ஒருவர், ஏழு வருடங்கள் கடந்த நிலையில் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கணனிப்பிரிவுப் போராளியான மேகலாவை முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை கண்ட உறவினர்கள், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாத போதும், உயிரோடு இருப்பார் என்று நம்பியிருந்தனர்.
இந்த நிலையில், முகப்புத்தகத்தில் ஒருவர் பதிவேற்றிய புகைப்படத்தின் இருந்து அவர் இறந்து விட்டார் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். எனினும் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பதை உறுதிசெய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.
இறந்து விட்டதாக அடையாளம் காணப்பட்ட கணினி பிரிவு போராளியான மேகலா, கணணிப் பிரிவுப் போராளியான லெப்.கேணல் கோகுலனின் மனைவியாவார். லெப் கேணல் கோகுலன் மன்னார் புத்துவெட்டுவான் சமரில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
