வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஐந்தாவது மரணம் பதிவானது!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச்...

வட மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 118 மையங்கள் – வைத்தியரத் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப்...
Ad Widget

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவிலிருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும்!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொற்று நோய் பிரிவினர் இதுகுறித்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொது இடங்களுக்கு செல்லும் போது...

மணல் கடத்தல்காரர்களுக்கு இராணுவம் துணையா? இரண்டு டிப்பர்கள் விடுவிப்பு!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு மணல் ஏற்றியவாறு இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அழுத்தத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், மணல் கடத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்குடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அணிக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது தொடர்பாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள்...

குருந்தூர் மலையில் மீட்கப்பட்டது பல்லவர் கால தாரா லிங்கம்!! – சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்

குருந்தூரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமானது பல்லவர்காலத்திற்குரியது. அது தாரா லிங்கம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறுல சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; மிக அண்மைய காலங்களில் தொல்பொருள் திணைக்களமானது பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது இந்து சைவப்பாரம்பரியங்கள் மிக்க இடங்களை பௌத்தத்திற்குரியயவையாக சொந்தம் கொண்டாடி வருகின்றன....

வடக்கில் 21 பேருக்கு கோரோனா- இருவர் யாழ்.பல்கலை மாணவர்கள்; ஐவர் வங்கி ஊழியர்கள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பிசிஆர்...

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – டக்ளஸ்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்டது தாரா லிங்கம் என வரலாற்று ஆய்வாளர் உறுதி – ஸ்ரீதரன்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல்...

பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பிற்கு அமெரிக்க தூதுவர் வரவேற்பு!!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட குறித்த அறிவிப்பை மேற்கோளிட்டு அலைனா டெப்லிட்ஸ் டுவிட்டரில் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும் மத சடங்கு...

செயன்முறை பரீட்சையை வழமைபோன்று நடத்த ஏற்பாடு – கல்வி அமைச்சு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை வழமைபோன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சையை இரத்து செய்யப்படும் என முன்பு எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்வதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு எழுத்துமூல பரீட்சையினைத் தொடர்ந்து செயன்முறை...

வடக்கில் நடந்த பேரணி குறித்து கொழும்பு ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன்? – அமெரிக்கா கேள்வி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அமைதிவழிப் போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்....

நெடுந்தீவு மக்களிற்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நெடுந்தீவு பிரதேச செயலக பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வர்த்தமானி மூலம் உள்வாங்கப்பட்ட 1,840 ஹெக்ரயர் நிலப்பரப்பில் தனியார் காணிகள் உள்ளடக்கப்பட்டிருப்பின் குறித்த காணி உமையாளர்கள் தமது காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நெடுந்தீவு பிரதேச செயலர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் வடக்கு மாகாண இணைச்செயலாளர் மா.பரமேஸ்வரன்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி!!

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது. முழு கல்வி முறையையும் தற்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த...

வடக்கில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...

“ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம்” – கருணா அம்மானுக்கு எதிரான மனு வாபஸ் !

ஆணையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்ற கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கடுவல நகரசபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில்...

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும் – சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்காது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார். இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு...

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை!! – சுமந்திரன்

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தெற்கில் உள்ள 15 சிங்கள பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 30 பேரை...

நாட்டில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் பதிவு – மொத்த எண்ணிக்கை 71ஆயிரத்தைக் கடந்தது

நாட்டில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 976 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 971 பேர் பெலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய நான்கு...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி – பருத்தித்துறை நீதிமன்றிலும் வழக்கு தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத்...
Loading posts...

All posts loaded

No more posts