Ad Widget

நாட்டில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் பதிவு – மொத்த எண்ணிக்கை 71ஆயிரத்தைக் கடந்தது

நாட்டில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 976 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 971 பேர் பெலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய நான்கு பேர் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குவைத்திலிருந்து வருகை தந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலில் சிக்கிய நோயாளர்களது எண்ணிக்கை 67 ஆயிரத்து 196 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 71 ஆயிரத்து 211 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 912 நோயாளர்கள் பூரண குணமடைந்து நேற்றைய தினம் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 65 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் 694 பேர் சந்கேத்தின் பேரில் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், 5 ஆயிரத்து 788 நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொவிட் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts