Ad Widget

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேரின்...
Ad Widget

இனிப்பு பண்டங்களுக்காக 5,000 கோடி ரூபா செலவு!

நாட்டு மக்கள் ஒரு வருடத்தில் சுமார் 5,000 கோடி ரூபா பெறுமதியான வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி மற்றும் இனிப்பு பண்டங்களை பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட...

சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதற்கு புதிய முறை!

புதிதாக சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்றை அறிமுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் பிரதேச செயலாளர் மட்டத்தில் வெளியேறும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்காக தகுதிகளை கொண்ட புதிய குடும்ப பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.. இதற்கான சுற்றறிக்கை ஒன்று கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைவாக...

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379...

அதி அபாய வலயங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி – இராணுவத் தளபதி

மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களை...

மாணவர்களை ஆடைகளைக் களைய வைத்து ஆசிரியர்கள் துன்புறுத்தல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11இல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தரம் 11இல் பயிலும்...

நாட்டை பூட்டவேண்டும்- பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை; முடக்க விரும்பவில்லை – ராணுவத் தளபதி

புதிய கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தொழில்நுட்ப மதிப்பீடு செய்யப்படும் வரை நாடு பூட்டப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு முடக்கத்தின் கீழ் வைக்கப்படும் என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும், இப்போதைக்கு, நாங்கள் ஒரு முடக்கத்துக்குச் செல்ல விரும்பவில்லை என்று இராணுவத் தளபதி...

இலங்கை காவல்துறையின் பல்வேறு பதவி நிலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை காவல்துறையின் பல்வேறு பதவி நிலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த 12.02.2021 ம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரச வேலைவாய்ப்பு அறிவித்தல்களில் இப்பதவிக்கான முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன் படி இலங்கைக் காவல்துறையில் நிலவும் காவல்துறை கான்ஸ்டபில் ,பெண் காவல்துறை கான்ஸ்டபிள், காவல்துறை கான்ஸ்டபிள்...

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதேவேளை கண்டி, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக...

ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன – விக்னேஸ்வரன்

ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,...

ஜெனீவா விடயம் – வடக்கில் நுழையும் சீனக் கம்பனிகள் விடயம்: தமிழ் கட்சிகள் எடுத்துள்ள முடிவு!!

தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய...

தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி

தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கபப்படவுள்ளது. அதன்படி, இந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் என விஷேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். பிரதான வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாதாரண தனியார் வைத்தியசாலைகளில்...

கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல்...

கொழும்பு- யாழ். நகர்சேர் கடுகதி சேவையில் இன்று முதல் 2ஆம்,3ஆம் வகுப்புகள் இணைப்பு!!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் சேவையில் ஈடுபடும் தொடருந்தில் இன்று முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த தகவலை யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவித்ததாவது; கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை – சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியினை...

ஐபிஎல் வீரர்கள் ஏலம் பட்டியலில் யாழ்ப்பாணம் வீரர் வியாஸ்காந்த் இடம்பிடித்தார்!!

14ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் புதிய வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த 9 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிலேயே விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் வரும்...

வடக்கில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்று; ஒருவர் யாழ்.கச்சேரி பஸ் சேவை நடத்துனர்

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன....

லுணுகல, எகிரியா பகுதிகளில் நில அதிர்வு

லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலும் இந்த நில அதிர்வு எதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 31...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை!!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ்...
Loading posts...

All posts loaded

No more posts