Ad Widget

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் பெறுமதியான மரங்களை வெட்டிச் சாய்த்த பேராசிரியர்!

இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாமல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்த பெறுமதியான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. இந்த மரஅழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலா, தென்னை, வேம்பு ஆகிய மரங்கள் பெரு விருட்சமாக நீண்ட காலமாக ஒரு சோலையாக இந்த பரமேஸ்வரன் ஆலயம் காட்சியளித்தது....

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அனுமதியின்றி அழைத்துச் சென்ற பொலிஸார்

யாழ். நகரப் பகுதியில் உள்ள நகைக் கடையின் உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஊழியர், வைத்தியசாலையின் அனுமதியுமின்றி பொலிஸாரால், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என' யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் இயங்கும் பிரபல நகைக்கடை உரிமையாளரின் தாக்குதலுக்குள்ளான ஊழியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்....
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கடை ஊழியரை அறைந்தார் முதலாளி! செவித்திறன் பாதிப்பு

யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலைசெய்யும் ஊழியரை, கடை உரிமையாளர் தாக்கியதில் அந்த ஊழியர் செவித்திறன் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, உரிமையாளர்...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து உத்தரவிட்டார். அச்சுவேலி - பத்தமேனி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், இடைக்காடு பகுதியைச் சேர்ந்த...

சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் : அரசாங்கம் அனுமதி!! வட மாகாண சுகாதார அமைச்சர் தடை!!!

யாழ்.மாவட்டத்தில் பிரதேச சுகாரதார பணிமனையின் கீழ் உள்ள சுகாதார தொண்டர்கள் 820 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் நேற்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு தெரிவித்துள்ளார்....

நாவற்குழியில் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்!

சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு...

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தூங்கிய எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது. இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பில், நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, இந்த கூட்டத்தின் போது...

மாமியின் ATM அட்டையை களவாடிய மருமகளுக்கு விளக்கமறியல்

கணவனின் அம்மாவுடைய (மாமி) ஏ.டி.எம் அட்டையை திருடி, 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த மருமகளை நாளை வெள்ளிக்கிழமை (27) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (25) உத்தரவிட்டார். பருத்தித்துறை, தும்பளையிலுள்ள கணவனின் தாயார் வீட்டுக்குச் கடந்த 18 ஆம் திகதி...

பெண்ணொருவர் ஓட்டோ சாரதி ஒருவரை அடிக்கும் காணொளி!!

குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவருக்கும், யுவதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணைப்பு தளங்களில் அதீத பிரசித்தி அடைந்து வருகின்றது. சேட்டை செய்த ஓட்டோ சாரதியை செருப்பால் அடிக்கின்றார் இந்த யுவதி. இச்சண்டைக்கு வாரியபொல சண்டை – 2 என்று ஊடகவியலாளர்கள் பெயரிட்டு உள்ளனர். ஏற்கனவே சில...

குசு வுக்குள்ளது மருத்துவ குணம்- ஆராய்ச்சி முடிவு

அடிக்கடி வாயுக் “குண்டு“ போடுபவரா நீங்கள்? கவலையை விடுங்கள்! அது மனித குலத்தின் நலவாழ்வுக்கு நல்லது என்று புதிய ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஆசன வாயு வெளியேற்றுதலானது, புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாத நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாம்! வாயுவை விடுவிப்பவர்களுக்குச் சரி, பக்கத்திலே இருப்பவர்கள் தவிப்பரரே என்று நீங்கள் கேட்கலாம். ’மனிதரால் வெளியேற்றப்படும்...

தந்தை கொலைசெய்யப்பட்டதை அறியாது தந்தையை எழுப்ப 5 நாட்கள் முயற்சி செய்த பிள்ளைகள்!!

கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.தமது தந்தை இறந்ததை அறியாத...

வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக...

ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை?

சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து வருவதாக வெளியான தகவல்கள் ஆபிரிக்கர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இத்தகவலை சாம்பியாவின் சீன தூதுவரான யாங் யொம்மி கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சீனநாட்டவர்கள் மனித உடல்களை எடுத்து அவற்றை உப்பு மற்றும்...

சுபநேரத்தில் கொலை: பூசாரி கைதானார்

ளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இரும்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். இந்தப்...

இரு கோவில்களின் விக்கிரகங்கள் மணலினுள் புதைப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பழம்பெரும் பிள்ளையார் கோவிலிலும் இருந்த விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விக்கிரகங்கள் தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலில் இருந்த நாகதம்பிரானின் ஏழு...

தாமதமாக பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களை தண்டித்த அதிபர்

கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரைக் கூறி யாழில் மோசடி!

இலங்கையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மடத்தடிப் பிரதேசவாசி ஒருவர் 36,000 ரூபா பணத்தை இழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தெரிவித்திருப்பதாவது, நேற்று முன்தினம் எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நாம் குறித்த தொலைபேசி நிலையத்திலிருந்து கதைக்கின்றோம்....

டக்ளஸ் வராததால் ‘நினைவுத்தூபி’ ஒத்திவைப்பு

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான, எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத்...

செம்மணிப் பகுதியில் ஆசிரியையை மீது பாலியல் தொந்தரவு!!

நேற்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில்...
Loading posts...

All posts loaded

No more posts