யாழில் போதையற்ற தேசம் விழிப்புணர்வு நிகழ்வுகள்

ஜனாதிபதியின் போதையற்ற தேசம் என்ற சிந்தனைக்கமைய வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அமைச்சானாது விசேட செயற்திட்டம் ஒன்றை பாடசாலை மாணவர்களிடத்தில் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட போதைப்பொருள் விழிப்புனர்வு நிகழ்வு... Read more »

யாழில் போதை ஒழிப்பு நிகழ்வு

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று(12) இடம்பெற்றது. ‘சுய கண்ணால் போதையற்ற உலகை காண்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

காக்கைதீவில் வடக்கின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையம் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அடிக்கல் நாட்டி வைத்தார்

வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித... Read more »

மாணவர் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர வேண்டும் -அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. ‘ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்’ என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக,... Read more »

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல்

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (03.07.2015) யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. விவசாய இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மூலமும் உணவுச்சங்கிலிகள் மூலமும் இரசாயன நஞ்சுகள் உடலைச்... Read more »

தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை தினம்

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை நிகழ்வு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. ஈழத்தில் வாழும் வயதில் மூத்த சிவாச்சார்யார்களாகிய இணுவில் காயத்திரி பீடத்தினுடைய முதல்வரும் தர்மசாஸ்தா குருகுல அதிபருமாகிய சிவஸ்ரீ... Read more »

வடக்கு – தெற்கு முதியோர் நட்புறவு

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு, தெற்கிலுள்ள முதியோர்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் இணைப்புத்திட்ட நிகழ்ச்சியொன்று, கைதடி முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்றது. தெற்கிலிருந்து அழைத்து வரப்பட்ட 125 முதியவர்கள், கைதடி முதியோர் இல்ல முதியவர்களுடன் இணைந்து கலை நிகழ்வுகளை நடத்தினர். கொழும்பு,... Read more »

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று... Read more »

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசனினால் திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி முழங்காவிலில் விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத்தை நேற்று திங்கட்கிழமை (08.06.2015) வடமாகாண கூட்டுறவு அமைச்சர்பொ.ஐங்கரநேசன் திறந்துவைத்துள்ளார். பழச் செய்கையாளர்கள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கம் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் உதவியுடன் சேதன முறையில் பப்பாளிச்... Read more »

சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும்... Read more »

மே18 நினைவு நிகழ்வுகள்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கான கிரிகைகள்! 2009 ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதிமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட அனைத்து ஜீவஆண்மாக்களிற்காகவும் சாந்திகிரிகைகள் இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண ஐக்கியதேசியகட்சியின் அமைப்பாளர் திரு.துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் மிக அமைதியானமுறையிலே... Read more »

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணர்வுபுர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில்... Read more »

இயல் இசை நாடக விழா – 2015

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி நடாத்தும் இயல் இசை நாடக விழா எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் 4 ம் திகதி வரை இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது Read more »

“தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா

தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த... Read more »

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில்

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க... Read more »

ஊர்காவற்துறையில் இரண்டு கோடி ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை

ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று முன்தினம் புதன்கிழமை (08.04.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச்... Read more »

புதுவை இரத்துனதுரை தொடர்பாகக் கையளிக்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதியிடம் இருந்து இதுவரையில் பதில் இல்லை – பொ.ஐங்கரநேசன்

கவிஞர் புதுவை இரத்துனதுரை தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு கோரி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கக் கோரி என்னிடம் கடிதம் தந்திருந்தனர். மாகாண ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அக்கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தேன். பொதுமக்கள் சிலர் தந்த முறைப்பாட்டுக் கடிதங்களையும்... Read more »

தென்னிந்தியத் திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசனின் பவளவிழாவும் நூல் வெளியீடும்!

தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் பவளவிழா நேற்று புதன்கிழமை மாலை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி பீற்றோ மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பேராயரின் சகோதரன் அருட்பணி சு.மனோபவன் தலைமையில் அகவை வழிபாடு இடம்பெற்றது. இதில் மன்னார் மறை... Read more »

யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்த நாம் சூழலியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்து விடக் கூடாது – பொ.ஐங்கரநேசன்

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்... Read more »

யாழ். மத்தியின் ‘சென்றல் நைட்’ வருடாந்த ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ‘சென்றல் நைட்’ வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.... Read more »