இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும்...

தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று...
Ad Widget

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக எதிர்க்கட்சி...

259 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைப்பட்டதாரிகள் 259 பேருக்கு நேற்று(புதன்கிழமை) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாணசபை தவிசாளர் சந்திரதாச கலபதி, பிரதம செயலாளர் சரத் அபய...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.க்கு எதிராக ஆளுநரிடம் கடிதம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக்...

இன்றைய வடக்குமாகாணசபை சிறப்பு அமர்வில்

வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு  96 வது அமர்வு இன்று காலை  ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார் அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார் அதன்பின் தன்னிலை விளக்கம் வழங்கும்போது எதுவித...

விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம்!

இன்றைய சிறப்பு அமர்வில்  விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் மிக நேர்த்தியாக மறுதலித்துள்ளார். விசாரணையின்போக்கினை துல்லியமாக உடைத்துதெறிந்து நீதிபதிகளுக்கு சட்டம் குறித்தும் நீதி குறித்தும் நடுநிலை குறித்தும் மிக காட்டமான பதிலடி கொடுப்பதாக அவரது விளக்க அறிக்கை அமைந்துள்ளது முக்கிய சாரம்சம்சங்கள்...

100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டினார் குமார் சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்த அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முதல் தர மற்றும் ஏ தர போட்டிகளில் 100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற குமார் சங்கக்கார, தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், வெளிநாட்டு...

சப்ராஷ் அஹமட்டுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை!

வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசுவதற்கு ஒரு மணித் தியாலம் தாமதப்படுத்திய குற்றத்திற்காகவே சப்ராஷ் அஹமட்டுக்கு போட்டி...

தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? :மெத்தியூஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிடிய பிடியெடுப்புக்கள் மற்றும் ரன் அவுட்டுக்களை தவறவிட்டமையே தோல்விக்கு முக்கிய காரணம் என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு பிடியெடுப்புக்களை எடுத்து களத் தடுப்பை சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தால் கூட இப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால்...

சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு

சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே,...

கர்ப்­பிணி கொலை: சாட்சியாளரிடம் பேரம் பேசியமை குறித்து விசாரிக்க உத்தரவு

ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பின் போது, தம்மை அடையாளம் காட்டாதிருக்க, சந்தேகநபர்கள், சாட்சியாளரிடம் பேரம் பேசியமை தொடர்பில், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம்...

அமைச்சர்கள் விடயத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாது: தவராசா

மாகாண அமைச்சர்களை நீக்குவதற்கும் புதிதாக நியமிப்பதற்குமான முழு அதிகாரமும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு என்றாலும், தற்போதைய நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் பதவி நீக்கம் தொடர்பில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாதென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு,...

சங்குப்பிட்டிப் பாலத்தில் விபத்து: நால்வர் படுகாயம்!

சாவகச்சேரி, தனங்களப்பு – சங்குப்பிட்டிப் பாலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்களும் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது....

இயற்கை அனர்த்தத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

இயற்கை அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான...

நான்கு அமைச்சர்களையும் நீக்கினால் எல்லோரையும் கலைத்துவிடுவோம் -முதல்வருக்கு மாவை எச்சரிக்கை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார்   மேலதிகமாக தமிழரசுக்கட்சி...

காவலாளி உயிரிழப்பு : தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

மீசாலை - புத்தூர் பிரதான வீதியில், கனகம்புளியடி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர், அதிகாலையில் வீதியை கடக்க முற்பட்ட போது வாகனம் அவரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது. அப்பகுதியில் உள்ள பால் சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் சரசாலை வடக்கைச் சேர்ந்த வி.சிவசுந்தரம் (வயது 65) என்பவரே இவ்வாறு...

நாளை அமைச்சர்கள் இருவரும் முதல்வரிடம் இராஜினாமா கடிதங்களை வழங்குவர்?

நாளை(14) வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தன்னிலை விளக்கம் வழங்க உள்ளனர். அதன்பின் முறைப்படி தங்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமைச்சர் குருகுலராஜா அவர்கள் இராஜினாமா செய்யப்போவதாக கட்சித்தலைமைக்கு அறிவித்திருக்கின்ற...

நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பால் தபால் சேவை முடங்கியது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தால் தபால் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன. நிர்வாக ரீதியாக தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு...

வடக்கு மாகாண விவகாரம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் மோசடியில் ஈடுபட்டதாக விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, ஜனாதிபதியிடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாத்திரமன்றி வடமத்திய...
Loading posts...

All posts loaded

No more posts