Ad Widget

விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம்!

இன்றைய சிறப்பு அமர்வில்  விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் மிக நேர்த்தியாக மறுதலித்துள்ளார். விசாரணையின்போக்கினை துல்லியமாக உடைத்துதெறிந்து நீதிபதிகளுக்கு சட்டம் குறித்தும் நீதி குறித்தும் நடுநிலை குறித்தும் மிக காட்டமான பதிலடி கொடுப்பதாக அவரது விளக்க அறிக்கை அமைந்துள்ளது

முக்கிய சாரம்சம்சங்கள் வருமாறு!

1.என்மீதான இலஞ்சம் ஊழல் நிதிமோசடிக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை உய்தறிவுகளாக வெளிப்படுத்திய விசாரணைக்குழு, தனது முடிவில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது

2. 13வது திருத்தச்சட்டத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவர் சுற்றுச்சூழல் சாரந்த விடயங்களில் தலையிடுவதை விசாரணைக்குழு சட்பூர்வமற்றதென நிறுவ முயன்றுள்ளது

3.அமைச்சின் செயற்திட்டங்களின் கொள்கைப்பெறுமதிகளை , விசாரணைக்குழு தனது செயற்பாட்டு எல்லைக்கு அப்பால் சென்று கேள்விக்கு உட்படுத்தியுள்ளது

இதை விட வரிக்கு வரி ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் நியாயமான விளக்கங்கள் வழங்கியுள்ளதுடன் தனது கேள்விகளால் விசாரணைக்குழுவை திணற வைத்திருக்கின்றார்! முழுமையான  அறிக்கை சிறிது நேரத்தில் வெளியிடப்படும்

முழுமையான  அறிக்கையை பார்வையிடுவதற்கு

 

???????? ???????????? ?????????????

Posted by Thangarajah Thavaruban on Wednesday, June 14, 2017

Related Posts