நேற்றய போராட்டம் வெற்றி ! : ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு,எதிர்ப்புதெரிவித்தும் ,முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் நேற்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கிறது. காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய...

சிவிகே ஏன் கூட்டுறவு நியதிச்சட்டங்களை கிடப்பில் போட்டார் ? வெளியாகும் உண்மைகள்

கூட்டுறவு அமைப்புக்கள் பலவற்றின் மில்லியன் கணக்கான நிதி கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தில் வைப்பிலிட்ட போது அதன் தலைவராக இருந்த சீ.வி.கே பொதுச்சபையின் தீர்மானமின்றி தன்னிச்சையாக மில்லியன் கணக்கில் பிரமுக வங்கியில் வைப்பிலிட்டார். அவ் வங்கி திவாலாக மத்திய வங்கி சுவிகரித்து கொண்டது. தற்போதைய நிலவரப்படி அவ்வாறு வைப்பிலிட்ட அமைப்புக்களின் நிதியை மீளச் செலுத்த 13...
Ad Widget

அம்பலமாகியுள்ள US கோட்டல் சதி! விசாரணைக்குழுவுக்கு விந்தன் வழங்கிய கடிதம் வெளியாகியது!

முதலமைச்சருக்கு எதிராக பின்னப்பட்ட  சதிவலை குறித்து மாகாணசபை உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு வழங்கிய கடிதம் எமது செய்தித்தளத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பிரதி முதலமைச்சருக்கும் அவர் வழங்கியிருந்தமை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களால் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்  பிரேரணை தொடர்பில் முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால் வழங்கப்பட்ட விளக்ககடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில்...

தெற்கு நிகழ்ச்சி நிரலுக்கமையவே எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை -மக்கள் முன் முதலமைச்சர்

தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மகாண சபை முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைணைக் கண்டித்தும், முதலமைச்சருக்கான தங்கள் பேராதரவை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழ் மக்கள்...

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்.

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக   வினாவியபோது பா.உ சி.சிறீதரன்   மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன் சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான...

அமைச்சர் சத்தியலிங்கத்தை அகற்றுவதில் முதல்வர் தீவிரம் – இன்றைய உரையில் தொனித்தது.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேற்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும்...

முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது

அவைத்தலைவர் தலைமயிலான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து ஆளுனர் முதல்வரின் பலத்தை நிரூபிக்குமாறு கேட்டிருந்தார் இதுவரைக்கும் முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என அறியவருகின்றது.இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடலில் இறங்கி போராட்டம்!

தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் கடலில் இறங்கி வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல்...

தமிழரசுக் கட்சியுடன் சம்பந்தன் அவசர கலந்துரையாடல்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதுகுறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கிற்கு விரைந்துள்ளார். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சம்பந்தன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பதிலாக...

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்: கஜேந்திரகுமார்

வடமாகாண முதலமைச்சரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

முதலமைச்சர் சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமிழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண அமைச்சர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு...

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு?

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. குறித்த திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன் வைக்குமாறு நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்வது சம்பந்தமான தேசிய கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01ம் திகதி கட்டணங்களில் திருத்தம்...

தமிழ்மக்கள் பேரவையின் அவசர ஒன்றுகூடல்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் - வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி காலம் : இன்று...

நிலமை எல்லை மீறிவிட்டது -முதல்வர் வருத்தம்!

இன்று காலை அமைச்சர் ஐங்கரநேசன் முதல்வர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க இராஜினாமா செய்வது தொடர்பில் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் அமைச்சருடன் மனந்திறந்து பேசியுள்ளார். அதன்போது அமைச்சர் ஐங்கரநேசன் தான் அவருக்கு தனது ஆதரவினை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்திருந்திருக்கிறார். இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே...

அடுத்த முதலமைச்சர் தொடர்பில் என்னால் முடிவெடுக்க முடியாது : ஆளுநரிடம் மாவை

“அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் தெரிவித்துள்ளேன் என, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே...

தமிழ் தேசிய உணர்வினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சாகடிக்கின்றனர்: சர்வேஸ்கரன்

தமிழ்த் தேசிய உணர்வினை சாகடிக்கின்ற செயலினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு அமைச்சர்கள் இருவரை பதவி விலகுமாறு பணித்தமை மற்றும் இருவருக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை தொடர்பாக, முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுநரிடம் 22 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு கடிதமொன்றை...

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர்...

முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டவர்கள் இவர்கள்தான்!

வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி நேற்றைய தினம் (புதன்கிழமை) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை!

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில்...

யாழில் தொடரும் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… நேற்று மாலை யாழ்ப்பாணம்...
Loading posts...

All posts loaded

No more posts