வடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27,...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் நேற்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்படி...
Ad Widget

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணை

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர், கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து...

தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தருணம் இது: சம்பந்தன்

புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...

இலங்கையில் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டத்தடை

இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான...

மஹிந்த அணியினரை எச்சரித்தார் விஜயகலா மகேஸ்வரன்

நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசிக்கொண்டிருக்காமல் எமக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என இராஜாங்க அமைச்சரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் எதிரணியினரை கடுந்தொனியில் எச்சரித்துள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் நாடாளுமன்றில்...

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய அணி

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஜமைக்காவில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் சார்பில் கைல் ஹோப்...

வங்கியில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபா மாயம்

வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வங்கியில் கடந்த மாதம் 05 ஆம் திகதியன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு...

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். “இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை. “அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை,...

சக பொலிஸ் அதிகாரியின் பெறுமதியான கடிகாரத்தை திருடிய பொலிஸ் அதிகாரி

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சக பொலிஸ் அதிகாரியின் 1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் பரிசோதகர், வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணைக்காக யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்க நேற்று...

8 விக்கெட்டுக்களால் சிம்பாபே அணியை வீழ்த்திய இலங்கை

சிம்பாபேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, துடுப்பெடுத்தாட வந்த சிம்பாபே சார்பில், ஹாமில்டன் மஸகட்சா சிறப்பாக விளையாடி, 111 ஓட்டங்களைக் குவித்தார். இவரது...

நான்கு பேர் இணைந்து சட்டம் இயற்ற முடியுமாயின் நாடாளுமன்றம் எதற்கு? : சுமந்திரன்

”நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் இணைந்து சட்டமியற்றக்கூடியதாக இருக்குமென்றால் இந்த நாடாளுமன்றம் எதற்கு?” என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்றும், பலவந்தமாக காணாமல்போகச் செய்வதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் அவசியமில்லை என்றும், அண்மையில் மகாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே அவர் இவ்வாறு...

வடக்கில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு: மின்சக்தி அமைச்சர்

மாற்று சக்தி மின் நிலையத்தில் வடக்கில் உள்ள 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய மாற்று சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகப்பெரிய மாற்று...

நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்து 800 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களை விட இந்த வருடம் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக நந்திக்கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நந்திக்கடலை...

பிரதமர் மோடியின் அனுபவ குறிப்புடன் முதல்வர் விக்கியை சந்தித்தார் தமிழிசை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்ததுடன் பிரதமர் மோடியின் அனுபவ குறிப்பு ஒன்றினையும் வழங்கியுள்ளார். யாழ்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்த தமிழிசை, வடக்கு முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை இச்சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்...

குளிரூட்டப்பட் அறையில் உள்ளவர்கள் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும்: ஸ்ரீதரன்

கொழும்பில் குளிரூட்டப்பட் அறையில் இருந்து தீர்மானம் எடுக்கும் அமைச்சர் வடக்கில் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து...

பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துபவர்கள் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும்: சுவாமிநாதன்

வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துகின்றவர்கள் முதலில் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு வாய்ப்பில்லை: அமைச்சர் மனோ

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகியவற்றிற்கு வாய்ப்பே இல்லை என தேசிய கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பையும் காணாமல் போனோர் அலுவலகத்தையும் உடனடியாக கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது!

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறும் மாற்று வழிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார்...

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். செய்தி மூலங்களை அறிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டமொன்று அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டம் அறிமுகம்...
Loading posts...

All posts loaded

No more posts