- Wednesday
- May 20th, 2026
ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற சிம்பாபே அணிக்கு எதிரான 5 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் தோல்வியடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 203...
பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழல் மோசடி, நிதி மோசடி மற்றும்...
காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட்...
யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும், எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான்...
தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு ஊடகமொன்றிற்கு...
என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும்...
கனிய வள அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் நடைப்பெறாவிட்டால் முன்னறிவித்தல் இன்றி மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக கனிய எண்ணெய் சார் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன் இணைப்பாளர் டி.ஜே ராஜகருணா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தற்காலிமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க தரப்பில் இருந்து எந்த விதமான உறுதி...
வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார். http://www.e-jaffna.com/archives/84168
“தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்...
“வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தயாரித்தல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று நாட்டுக்கு அவசியம் இல்லை என்ற கருத்து தொடர்பில் தாம் அவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூட்டமைப்பின்...
நாட்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுராதபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மூளை செயலிழந்த 24 வயதுடைய இளைஞனின் இருதயம் இவருக்குப்...
கண்ணில் உள்ள வெள்ளை படர்தலை நீக்கும் சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் உயர்த்தரத்திலான கண் வில்லைகள் இலவசமான முறையில் பொருத்தப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் முஹம்மட் ரிஷாப் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும், மூவாயிரத்திற்கும் இடைப்பட்ட நோயாளர்கள் இவ்வாறான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 15 வைத்திய நிபுணர்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்கிறார்கள். உயர்தரத்திலான...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.கச்சேரிப் பகுதியில் குறித்த பேருந்தினை மறித்துச் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் பயணித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை...
வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பேரூந்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளதாக பேரூந்தின் உரிமையாளர் தெரிவித்தார். வவுனியாவில் இருந்து மாலை 5.30 மணியளவில் செட்டிகுளம் நோக்கி பயணித்த பேரூந்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் ஏறியுள்ளதுடன், சிறிது தூர பயணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் பேரூந்தின் நடத்துனருடன்...
ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரே பாடசாலையில் பல வருடங்கள்...
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள்...
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆவது ஆண்டு நேற்று நினைவு கூரப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் சுடரேற்றி உணர்வு பூர்மாக அஞ்சலி செலுத்தினர். 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் அரச போர் வானூர்திகள் சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் முன்னேறிப் பாய்ச்சல் எனும் அரச படைகளின்...
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது...
வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் என்பன அங்கீகரிக்கப்பட்டு சமஸ்ட்டி என்னும் வார்த்தையை உள்ளடக்கியதாக அமைந்தால் மட்டுமே புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் இவ்வாறு த.தே.ம முன்னணியினர் நாடாத்திய ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் ஊடக மாநாடு தொடர்பான காணெளி https://www.youtube.com/watch?v=7TzR8ow3SrA&feature=youtu.be https://www.youtube.com/watch?v=Exfc3U6xTBA&feature=youtu.be https://www.youtube.com/watch?v=yQ174qhGcvM&feature=youtu.be...
Loading posts...
All posts loaded
No more posts
