- Wednesday
- May 20th, 2026
மகாநாயக்கர்களை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லையென பௌத்த உயர் பீடத்தின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பின் அவசியப்பாடு தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும்...
வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் கையளிக்க நான் விரும்பவில்லை. அதிலிருந்து ஒதுங்கவே விரும்பினேன் என வட மாகாண சபை அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சி சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். சமகால அரசியல் கருத்தரங்கும், கேள்வி பதில் நிகழ்வும் என்னும் தொனிப் பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதியைச்...
டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க...
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற தீர்மாணமிக்க இறுதிப்போட்டியில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களின் ஆடைகள் கழற்றிய சம்பவம் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. நாளொன்றுக்கு 1000 ரூபாய் என்றடிப்படையில் ஏறக்குறைய 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர்களின் ஆடைகள் கழற்றப்பட்டதன் பின்னரே சம்பளத்தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக ஊழியர்களுக்கு நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட காற்சட்டைகளில் இலங்கை கிரிக்கெட்...
சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மெத்தியூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே குறித்த முடிவினை மெத்தியூஸ் எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. குறித்த நியமனம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கோப்பைத் தொடர் வரை நீடிக்கும் என சபை (BCCI) தெரிவித்துள்ளது. அந்த வகையில் அவரது முதலாவது பணியாக, ஜூலை 26 இல் இலங்கையில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் துன்னாலையைச் சேர்ந்த இளைஞன், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகிய சம்பவத்தில், பொலிஸாரினால் அதிரகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை...
யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்,...
காணாமல் போனோருக்கான அலுவலத்தின் மூலம் பொறுப்புக் கூறவேண்டியவா்களை அல்லது குற்றவாளிகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு எவ்வித பரிகாரங்களும் வழங்கபடவில்லை எனவும் சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளாா். தனியார் தொலைக் காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளாா். குறித்த நோ்காணலில் அவா் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காணமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவா், யாரினால்...
மக்கள் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தெஹியத்த கண்டிய மகாவலி சாலிகா மண்டபத்தில் இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சியில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என்பதை...
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘தமிழ் இணைய மாநாடு’ இவ்வாண்டு கனடாவின் தொரண்டோ நகரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் 27ம் திகதி வரை நடைபெற உள்ளதாக ஏற்கனவே உத்தமம் அறிவித்திருந்தது. மாநாட்டு தலைவராக உத்தமத்தின் உறுப்பினரும் வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியருமான செல்வக்குமார் அறிவிக்கப்பட்டிருநதார் மாநாட்டுக்கான...
கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் காவல்துறை அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால் நேற்று திங்கள் இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப் பட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த...
பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, நேற்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய்...
”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள்...
யாழ். மல்லாகம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான குறித்த மாணவி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். பின்னர், கடத்தப்பட்ட வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி, பொதுமக்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில்...
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை என்றும் ஒற்றுமையே பலம் என்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்திருந்த கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங்கிற்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அண்மையில் யாழில்...
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றுவதற்கான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம டபிள்யூ எம் என் ஏ .புஸ்பகுமார இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் , தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 10ஆவது தடகளத் தொடரில், யாழ். கல்வி வலயம் சம்பியனானது. யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தடகளத் தொடர், நேற்று (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. இதில் யாழ்ப்பாண கல்வி வலயம் மொத்தமாக 650 புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. வெற்றிக்கிண்ணத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிவைத்தார்....
யாழ்.பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக்கிரியை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அப் பகுதியில் ஏராளமாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞனின் சொந்த இடமான துன்னாலையிலும், நெல்லியடி முதல் கொடிகாமல் அரசடி வீதிவரையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்தில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் குவிந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும்...
சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சகல அரச சேவைகளினதும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாநாடொன்றை நடத்தவுள்ளது. இதன் பலனாக நாட்டின் அரச சேவைகள் அனைத்தும் ஒரு நாள் ஸ்தம்பிக்கும் வகையிலான வேலை நிறுத்தப்போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் நலிந்த ஹேரத் தெரிவித்தார். இந்த போராட்டத்தின் ஒரு...
Loading posts...
All posts loaded
No more posts
