Ad Widget

குற்றவாளிகளை சட்ட ரீதியாக காப்பாற்றப் போகின்றது புதிய சட்டம்: கே.வி. தவராசா

காணாமல் போனோருக்கான அலுவலத்தின் மூலம் பொறுப்புக் கூறவேண்டியவா்களை அல்லது குற்றவாளிகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு எவ்வித பரிகாரங்களும் வழங்கபடவில்லை எனவும் சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தனியார் தொலைக் காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளாா்.

குறித்த நோ்காணலில் அவா் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

காணமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவா், யாரினால் காணாமல் ஆக்கப்பட்டாா் என்பதை, காணாமல் போனோருக்கான அலுவலகம் தன்னுடைய விசாரணைகளில் கண்டறிந்தாலும் குற்றம் செய்தவருக்கு எதிராக சட்ட ரீதியாக எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்பதுடன் அதனை வெளியில் தெரிவிக்கவும் முடியாது. மீறி வெளிதெரிவிக்கப்படுமாயின், தெரிவிப்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று காணாமல் போனோருக்கான அலுவலக சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆக, குற்றம் புரிந்தவா்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்ற சூழல் ஒன்று உருவாகியுள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்டவா்களுக்கு பரிகாரம் வழங்கு எந்த ஏற்பாடுகளையும் இந்த சட்டத்தில் காணக் கூடியதாக இல்லை” என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், சா்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றது என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கிலும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினா்களினால் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வருவதற்காகவும் உருவாக்க்பட்டுள்ள புதிய சட்டத்தினால், காணாமல் போய்விட்டாா் என்ற அறிக்கையையும் மரண சான்றிதழ் வழங்குவதும் மட்டுமே நடைபெறப் போகின்றது எனவும் தெரிவித்துள்ளாா்.

Related Posts