அச்சுறுத்தல் நிலவிய வேளை போகாத உயிர். அமைதியான காலத்தில் போய்விட்டது. : யாழ்.மேல் நீதிபதி வருத்தம்

வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் எனக்கு பாதுகாப்பு வழங்கும் போது போகாத உயிர் யாழ்பாணத்தில் அமைதி நிலவும் போது போயுள்ளது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார். நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய் பாதுகாவலர் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம்: வடக்கு முதல்வர்

நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிள்றோம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உப பொலிஸ்மா அதிபருக் பணித்துள்ளேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் உள்ளதாவது- கடந்த சனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்த பொலிஸ் சார்ஜென்ட்...
Ad Widget

‘நீதிபதி எம். இளஞ்செழியன் இலக்கு அல்ல’ : யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்

‘நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. நீதிபதிக்கு, யாழ்ப்பாணத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார். நல்லூரில், சனிக்கிழமை( 22) மாலை 5:10க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

நாளை கண்டனப் பேரணி!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி...

தீர்வு கிடைக்கும் என்று நம்பியே இந்த ஆட்சியைக் கொண்டு வந்தோம்: மாவை

நாம் இந்த ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களைத்தான் தமிழ்...

வட.மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். நீதிமன்ற வளாகத்தில் நேற்திறயதினம் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவி சாந்தா...

நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது: கஜேந்திரகுமார்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்கு, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு,...

நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை விடுத்துள்ளார். அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குழுக்களை...

யாழ். துப்பாக்கிச்சூடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் மஹிந்த!

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம்...

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எதுவும் விளங்காததுபோல நடிக்கிறார் : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தொடர்ந்தும் இந்த அவையில் ஒரே கேள்விகளையே முன்வைத்து வருகிறார். நாங்களும் விக்கிரமாதித்தன்போல திரும்பத் திரும்ப அதே பதிலையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு இவை விளங்கவில்லையோ அல்லது விளங்காததுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஊடகங்களில் தொடர்ந்தும் இந்தச் செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே அவர் மீண்டும் மீண்டும் அதே பிழையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்...

சீ.ஐ.டியின் அழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம்

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சீ.ஐ.டி) விடுக்கப்பட்ட அழைப்பை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்....

வட மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு : எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரை

கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத்...

ஐ.நா. செயலாளர் இலங்கைக்கு பாராட்டு!

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தமது காணாமல் போன உறவுகள் பற்றி உண்மையைத் தேடும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...

2 மணி நேரத்துக்குள் டெங்கு பரிசோதனை பெறுபேற்றை வழங்கவும்

டெங்கு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு நடாத்தப்படும் இரத்தப் பரிசோதனையை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளின் பரிசோதனை நிலையங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்க 90 நிமிடங்களை அரச வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன. நோயாளர்களை அவசரமாக...

கப்பம் பெற்ற இளைஞனை கைது செய்ய உத்தரவு

இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் நேற்று (20) உத்தரவிட்டார். காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர்...

ஓட்டிசம் வடக்கு இளம் பராயத்தினரிடையே அதிகரிப்பதாக முதல்வர் கூறுகிறார்

ஓட்டிசம் என்பது பிள்ளைகளின் விருத்தியோடு தொடர்புடைய உளத் தொழிற்பாடுகளை பாதிப்படையச் செய்கின்ற ஒரு நிலையாகும் என வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அப்பலோ வைத்தியசாலையில் ஐந்து மணித்தியால இருதய சத்திர சிகிச்சையின் பின்னர் ஓட்டிசம் பற்றி என்னால்...

வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் நடவடிக்கை

வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடாக நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தலை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீள ஆரம்பிக்க வழிசெய்ய ஜப்பான் எதிர்பார்த்துள்ளது....

வித்யா கொலை வழக்கு: DIG லலித் ஜயசிங்க இடைநிறுத்தம்!

யாழ். ஊர்காவற்துறை மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கான தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை)...

வித்தியா கொலை வழக்கு: ஒளிப்பதிவிற்கு அனுமதி?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினுள் செல்லும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முதன்முறையாக நேற்று (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் முறையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது. வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள நிலையில்,...

தென்னிலங்கையில் ‘கிறீஸ் மனிதன்’! : ஒருவர் உயிரிழப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பீதியை கிளப்பிய ‘கிறீஸ் மனிதன்’ தற்போது தென்னிலங்கையில் உலாவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ‘கிறீஸ் பேய்’ என அழைக்கப்பட்ட இவ்வகையான மனிதர்கள், உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக்கொண்டு, குறிப்பாக பெண்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக...
Loading posts...

All posts loaded

No more posts