Ad Widget

வித்தியா கொலை வழக்கு: ஒளிப்பதிவிற்கு அனுமதி?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினுள் செல்லும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முதன்முறையாக நேற்று (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ட்ரயல் அட் பார் முறையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது.

வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள நிலையில், நேற்று மேலதிகமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நீதிமன்றின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்புக் கடமைகளில் சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts