- Wednesday
- May 20th, 2026
அரசியல் சாசனம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கு இடையிலான அரசியல் பேதங்களை களைந்து, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இணக்கப்பாட்டின்...
வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில், நள்ளிரவு வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை கடத்த முற்பட்ட 5 இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை 5 இளைஞர்கள் இணைந்து கடத்த முற்பட்டுள்ளனர். இதன்போது, மாணவியின் தாயார் கூக்குரல் இட்டதால் தாயாரை அவ்விளைஞர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேன்முறையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவுக்கு எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு,...
அரச வேலைவாய்ப்பு கோரி கடந்த 143 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். குறித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாத காலத்திற்குள் தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்...
நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சமூக ஊடக வலைத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில்...
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயம் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். நாட்டை மிரட்டும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவையாக இவ்வாறான செயல்கள் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறான பல குற்றச்செயல்கள் கடந்த காலங்களில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். பாணந்துறை நகர சபை...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமாரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவோ, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கோ உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவின் இரண்டாம் நாளான...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவாக இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் சிங்களத்தை பெரும்பான்மையாக பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக, ஊர்காவற்துறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகஜனை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், அவர்...
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ்...
ஜெயம் ரவி - அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான `தனி ஒருவன்' படம் அரவிந்த்சாமிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி தற்போது `சதுரங்கவேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `நரகாசூரன்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில், சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு...
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்' தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி',...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் என வெளியான தகவல் பொய்யானது என இக்பால் தெரிவித்துள்ளார். இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால்...
பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல்நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதியென 18.07.2017 திகதியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல்நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். பொருட்களை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகு அண்மையில் முல்லைத்தீவு கடலில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதுஎவ்வாறு இருப்பினும், இந்தத் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என, கடற்படை ஊடகப்...
கிளிநொச்சியில் மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் கூட, மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டமும் குறைந்து செல்வதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து கொண்டுள்ளது....
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் நேற்று (18) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆரம்பமானது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,...
சுகாதார சேவையில் வைத்தியர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரதுறை தொழிற்சங்கத்துடன் அண்மையில் நாரஹென்பிட்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைவாக மகப்பேறு, சுகாதார கனிஷ்ட அலுவலக உதவியாளர், குடும்ப சுகாதார சேவை...
வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேரூந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் தனியார் மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
