சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்: சீ.வீ.கே

சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது போன்று சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 61வது ஆண்டு விழாவில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...

வடமாகாணத்தில் 8 சதவீதமான மாணவர்களே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

வடமாகாணத்தில் 8 சதவீதமான மாணவர்களே நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என வடமாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் உள்ள 891 பாடசாலைகளை சேர்ந்த 20ஆயிரத்து 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றினார்கள். அவர்களில் ஆயிரத்து 727 பேரே...
Ad Widget

மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல அதிகாரி ஒருவர் நிதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி நேற்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். கிளிநொச்சி – மகாதேவா...

தாயை அடித்து கிணற்றுக்குள் வீசிக் கொன்ற மகன் கைது

யாழில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட...

டெங்கு ஒழிப்பு தொடர்பாக யாழில் விசேட கலந்துரையாடல்!

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 13.10.2017 (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலணி, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்கத் தகவல் திணைக்களம், வட.மாகாணத்தில் பரவியுள்ள டெங்கு நோயினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி கடந்த மாதத்தில் வட.மாகாணத்திலேயே...

கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தீர்வையே ஏற்போம்: சிறிகாந்தா

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலை ஏற்படுமாயின், கிழக்கை தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளர். அத்தோடு, கிழக்கு மக்களை பலிக்கடாவாக்கி கிடைக்கும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரசியல் தீர்வு...

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் நாடகம் அம்பலம்

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக, இலங்கை கடற்படையினர் போலியான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம்...

அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்: அடைக்கலநாதன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த...

அரசியல் கைதிகளைக் குற்றவாளிகளாக்கவே வழக்குகள் மாற்றப்பட்டன: சுரேஸ்

அரசியல் கைதிகளைக் குற்றவாளிகளாக்கவே திட்டமிட்டு அவர்களது வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறுத்தம்!

இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளமையை அடுத்தே மேற்படி நடவடிக்கைகைள் கைவிடப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய அதிகாரிகளின் நியமனம் தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை நீக்குமாறு கூறியே மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட துப்பாகி ஜனாதிபதி மைத்திரியை இலக்கு வைத்ததா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை அதுமல்பிடிய வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த துப்பாக்கியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னாள் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்து பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை...

சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை இடம்பெறவில்லை : இல்லத் தலைவர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

முல்லைத்தீவு இளைஞன் சுவிஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணம் என்ன?

முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சுவிஸ்லாந்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் கரன் என்ற 38 வயது குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் சுவிஸ்லாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார். இவர் புதுக்குடியிருப்பு 6 ஆம்...

மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு!

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு...

யாழ். கைதடி சாந்திநிலையத்திற்கு இராணுவ மகளிர் படையணி விஜயம்

யாழ்ப்பாணம் கைதடிப் பிரதேசத்திலுள்ள வயோதிப மடமான சாந்தி நிலையத்திற்கு யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 7ஆவது இராணுவ மகளிர் படையணியினர் தமது விஜயத்தை மேற்கொண்டனர். படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் கீதிக்கா ரண்கொடகே தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வயோதிப மடத்திலுள்ளவர்களுடன் கலந்துரையாடி உணவு மற்றும் குளிர் பாணங்கள் மகளிர் படையினரால்...

சயனைட் இன்றி அஞ்சா நெஞ்சோடு போராடிய தலைவர் பிரபாகரன்!

எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இறுதித் தருணத்தில் அவருடன் இருந்த ஏனைய...

நவீன முறையில் வாகன இலக்கத்தகடுகள்!

வானொலி சமிக்ஞைகள் மூலம் செயற்படும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வாகன இலக்கத் தகடுகளை அறிமுகம் செய்யவிருப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாகனங்களின் நடமாட்டத்தினை இலகுவாக பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியும் எனவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போலி...

வவுனியாவில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல்!

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததுடன் உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல்...

நாவற்குழியுடன் புகையிரத சேவைகள் நிறுத்தம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் ஒரு வாரத்துக்கு நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கும்-நாவற்குழிக்கும் இடையிலான புகையிரத பாதையில் உள்ள நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத...
Loading posts...

All posts loaded

No more posts