தமிழ் தேசிய கூட்டமைப்பு யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றயதினம் (11) பிற்பகல் 3.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகவும் ஏன்...

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!

இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல்,...
Ad Widget

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சி! : தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவர் கைது!

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பொலிசாரால் பரிசு!

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு இன்று பொலிசாரால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் காட்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிகள், சீருடைகள் என்பவை...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து, இன்று (புதன்கிழமை) காலை இந்த வழிபாட்டை நடத்தியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற...

கொழும்பிலிருந்து யாழ்வந்த அரைச் சொகுசு பேரூந்து விபத்து: இருவர் காயம்

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேரூந்தே விபத்தில் சிக்கியுள்ளது. இதன்போது பேரூந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேரூந்து வீதியில் அமைந்திருந்த பாலத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகுpறது. இச்சம்பவம் தொடர்பான...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை: ராஜித

கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர்...

வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் பலி

யாழ்.அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கு, நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், நாவற்குழி பகுதியை சேர்ந்த சஜீவன் (வயது – 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற மோட்டார்...

யாழ்ப்பாணத்தில் லியோனியின் பட்டிமன்றம்

தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14, 15 திகதிகளில் யாழ்ப்பாணம் யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இரண்டாம் நாள் நிகழ்வில் பட்டிமன்றம் பரதநாட்டிய நிகழ்வுகள் கலைஞர்களுக்கு விருதுவழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான பாரத கலாஞ்சலி வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும்...

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. பகலிரவாக நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து,159.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 482 ஓட்டங்களை பெற்றது. இலங்கை...

யாழில்.வங்கிக் கடனை செலுத்த முடியாமல் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்!

வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி பகுதியில் குடும்பநிலை காரணமாக நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்று வாராந்தம் அதற்குரிய பணத்தைச் செலுத்தி வந்துள்ளார். அண்மைக் காலத்தில் அவரால் வாராந்தம் குறித்த பணத்தொகையினைச் செலுத்த...

வடக்கு மாகாணசபையின் நடவடிக்கை தொடர்பில் டக்ளஸ் அதிருப்தி!

வடக்கு மாகாணசபை சரியாக இயங்கும் பட்சத்தில் எமது மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்: நாமலுக்கு விளக்கமறியல்

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை...

வித்தியா கொலைக் குற்றவாளிகள் மேன்முறையீடு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முறையீடு செய்துள்ளனர். அத்தோடு குறித்த ஏழு குற்றவாளிகள் சார்பிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

பிரபாகரனை கண்டு குற்ற உணர்ச்சியால் குறுகினோம்: ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை கடற்கரையில் கொல்லப்பட்டு கிடந்த காட்சியைக் கண்டு குற்ற உணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமது தந்தையை...

2ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள்!

விடுதலைப் போரில் விடுதலை புலிகள் சாா்பில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர்...

கைதிகளின் விடுலையை வலியுறுத்தி வடக்கில் வெள்ளிக்கிழமை பூரணஹர்த்தாலும் கண்டனப் போராட்டமும்

அனுரபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13-10-2017) அன்று வடமாகாணம்முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும் காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை...

ஆர்ப்பாட்டம் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல்!!

யாழ் போதனா வைத்தியசாலை முன்புறமாக 08.10.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல் 2017.10.08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக 08.10.2017 இல் ஆர்ப்பாட்டம் நடாத்த போவதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களையும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், அன்றையதினம் பொதுமக்களோ சமூக அமைப்புக்களோ...

நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் உயிர்ப்பு நிலையில் மிதிவெடி

வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலையின் வகுப்பறை முன்பாகவே குறித்த மிதிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறிதொரு வகுப்பறை திருத்த வேலைக்காக மண்ணை அகழ்ந்த போதே அப்பகுதியில் மிதிவெடி போன்ற ஒரு பொருள் இருப்பதனை அவதானித்த பாடசாலை அதிபர் உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts