Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னாள் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்து பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புள்ளின் பிரதிநிதிகள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ் பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இப் போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக யாழ் நகரைச் சுற்றி பேரணியாகச் சென்று மீளவும் பஸ் நிலையம் வந்து போராட்டம் நிறைவடைந்த்து.

வெள்ளைத் துணியில் பெருவிரலால் சிவப்பு நிற அடையாளம் இட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்ப்பாளர்கள், நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

 

 

 

Related Posts