சிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க!

சிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரிடம் கோருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இவர்கள் இருப்பதோடு, அதில் மூவர் தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது நலம் குறித்து விசாரணை செய்ய அனுராதபுரம் சிறைச்சாலைக்கு...

நீர் அருந்துவதையும் நிறுத்தப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் எச்சரிக்கை

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான, 6 வட மாகாணசபை...
Ad Widget

இலங்கை ஒரு ‘ஐக்கிய’ நாடு என்றே அழைக்கப்பட வேண்டும் : முதலமைச்சர் சி.வி.

புதிய அரசியலமைப்பில், இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இலங்கை ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர், “ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற...

ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு வடக்கில் கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 13 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்கள்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டம்!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்...

தனியார் பேருந்துக் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும்?

பேருந்துக் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்துச் சபை அனுமதி தராவிடில் நாடு தழுவிய ரீதியில் பேருந்து உரிமையாளர்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவர்...

போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது : பொ.ஐங்கரநேசன்

ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. தமது கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, பெற்றோர்களது கடமைகளையும் சேர்த்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மனப்பூர்வமாக இந்தப் புண்ணிய கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்ற ஆசிரியர்கள் தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படக் கூடியவர்கள்...

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில்!!!

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னத்தை இடைநிறுத்தியது வடக்குமாகாணசபை!

வடக்கு மாகா­ணத்­தில் 182 தொண்­டர் ஆசி­ரி­யர்­களை மட்­டும் ஆசி­ரி­யர் சேவைக்­குள் உள்­ளீர்ப்­ப­தற்கு கொழும்பு கல்வி அமைச்­சால் வழங்­கப்­பட்ட அனு­மதி தொடர்­பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்­னரே அவர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் 107ஆவது அமர்வு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண...

வடக்கு அமைச்சர்களால் அவமானம் : சி.வி.கே

வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்று பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்திய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணையை சமர்ப்பித்து அவைத்தலைவர் உரையாற்றிய பின்னர், எதிர்க்கட்சித்...

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்: அனந்தி

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும் என வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்...

அரசியல் கைதிகளை சந்திக்க செல்லும் வடமாகாண சபை குழு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வடமாகாண சபையின் நால்வரை கொண்ட குழு இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழுவில் தாம், உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மேலும் இருவர் அடங்குவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமது குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று...

காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்தார் மார்க் பீல்ட்

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என எடுத்து கூறினர். இதன் போது காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களையும்...

முகநூலால் முகமுடைந்த அரச ஊழியர்

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக தெரிவித்து போலி முகநூல் ஒன்றில் ஆண் உத்தியோக்தர் தகவல்களை பதிவேற்றியுள்ளார். அதில் குறித்த பெண், இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும்...

சாரதிகளின் அபராதத்தொகையை இணையத்தளம் மூலம் செலுத்தலாம்!

அபராதத் தொகையினை இணையத்தளம் மூலம் செலுத்தமுடியும் என்பதுடன், அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடம் கையளிக்க வேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். முன்னர் அபராத தொகையை செலுத்திய பின்னரே ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை காவல் நிலையங்களில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நடைமுறை இருந்தது. எனினும் குறித்த நடைமுறை சாரதிகளுக்கு மிகவும் அசௌகரியம் என்பதனால் அதனை...

ஆசிரியருக்கெதிராக துண்டுப்பிரசுரம் வெளியிட்ட மாணவர்கள் கைது

வவுனியாவில் ஆசிரியருக்கெதிராக துண்டுப்பிரசுரம் மூலம் பரப்புரை செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியாவிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் சாந்தசோலை, தாண்டிக்குளம் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுடைய இரு மாணவர்கள் அப் பாடசாலை ஆசிரியரை தகாத வார்த்தைகள் மற்றும் சித்தரிக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து வவுனியா நகர் முழுவதும் நேற்று...

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் அதிகாரிகள் நியமனம்!

யாழ். பகு­திக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக (எஸ்.எஸ்.பி) சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.யூ. விஜித குண­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மை­யாற்­றிய ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்­வு­ பெற்­றதைத் தொடர்ந்து வெற்­றி­ட­மான இடத்­துக்கே விஜித குண­ரத்ன இவ்­வாறு நிய­மிக்­கப்பட்­டுள்ளார். அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மை­யாற்றி வந்த நிலை­யி­லேயே நேற்று முன்தினம் இரவு முதல்...

அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! :சுவாமிநாதன்

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சாரதிணைக்­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரிவித்தார். மட்­டக்­க­ளப்­புக்கு வரு­கை­ தந்த அமைச்­ச­ரிடம் அனு­ரா­த­பு­ரத்தில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போரா ட்ட விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் இதனை...

இராணுவம் படிப்படியாக வெளியேறும் வடக்கு ஆளுநர் பிரித்தானியாவிடம் உறுதி

ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம் பெற்றுள்ளது. இதன் போது வடக்கு மாகாணத்தின் தற்போதய நிலைமைகள் நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநரிடம் மார்க் பீல்ட் தலைமையிலான தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். வடக்கில் முதலீடுகளை...

வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியூதீன் பதவி விலகல்

வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியூதீன் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வட மாகாண சபையின் 107 ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார். தமது பதவி விலகள் தொடர்பான கடிதத்தை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இன்று கையளித்தாக றிவ்கான் பதியூதீன் தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts