- Monday
- May 18th, 2026
நல்லூர் வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை அமைப்பதில் இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாக வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்நிலையில் ஏற்கனவே இப்புனரமைப்பு பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு வேலைகளை மாநகர சபை ஆரம்பிக்க வேண்டும் . இத்தூபியைப் புனரமைத்து பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று (வெள்ளிக்கிழமை) வட.பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஆளுநர், வடக்கு மக்களின் கடன்பளு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல – கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கப்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த பிரேரணை, தீர்மானமாக மாற்றப்பட்டு ஜனாதிபதி, துறைக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் எதிர்க் கட்சி தலைவர் ஆகியோருக்கு மின்னஞசல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை செய்யத் தேவைப்படுபவர்கள் இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை அதிபர் ஊடாக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஆசிய - பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த...
சதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதனால் இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு...
கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாடசாலைக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீள கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி – கல்மடு நகர், நாவல் நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதியில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும்...
சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை...
வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார். கொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர்...
இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் தலைமைகள் இனியும் மௌனம் காக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கை அநுராதபுரம்...
பல உயிர்களை காப்பாற்றிய வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியுள்ளது. அண்மைய சில வாரங்களாக நோய்வாய் பட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) இயற்கை எய்திய வைத்தியர் கணேசரட்ணத்தின் பூதவுடல், பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று காலை சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணம், யாழ்ப்பாணத்தில்...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டுக்குள் பாரியளவில் ஆயுத உற்பத்தி இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (03) ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது...
நாட்டின் பல பகுதிகளிலும், எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் இடையே இடையே மழை பெய்யுமெனவும் மேற்கு, வடமேற்கு மத்திய மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. ஏனைய மாகாணங்களில், மாலை 2 மணிக்குப்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிப்பது பாரிய பிரச்சனையாக உள்ளதென இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகைய இனவாதச் செயற்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டை காக்கின்றோம் எனக் கூறி சிலர் மேற்கொள்ளும் இனவாதச் செயற்பாடுகள், இறுதியில் துன்பத்திலேயே முடிவடையுமென...
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கேட்டு நாம் முன்னெடுக்கும் போராட்டம் எமது காலத்துடன் முடிந்து போகாது எனவும் எமது அடுத்த தலைமுறையும் நிச்சயம் போராடும் எனவும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சர்வதேச பிரதிநிதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு குறித்து கருத்து...
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை...
தமிழ் மக்களை பொறிக்குள் சிக்கவைத்துள்ள, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்க்கவேண்டுமென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகிய இடைக்கால அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றாத ஒன்றாகவே இடைக்கால அறிக்கை இருக்கின்றது. கடந்த காலங்களில் நாம் எவற்றை முன்வைத்து...
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறையில் உள்ள...
புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, 'தீர்வு' இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும் எனத் தமிழ்மக்கள் பேரவை...
Loading posts...
All posts loaded
No more posts
