Ad Widget

வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணத்தின் பூதவுடல் தீயுடன் சங்கம்!

பல உயிர்களை காப்பாற்றிய வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியுள்ளது.

அண்மைய சில வாரங்களாக நோய்வாய் பட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) இயற்கை எய்திய வைத்தியர் கணேசரட்ணத்தின் பூதவுடல், பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று காலை சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணம், யாழ்ப்பாணத்தில் கடுமையான யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான 1990-1995ஆண்டுகள் காலப்பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதான வைத்தியராக கடமையாற்றி, காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் போராளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதை தனது வரலாற்று கடமை என ஏற்று செயற்பட்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் மேலைநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அவரை தேடிவந்த போதிலும் அவற்றை புறக்கணித்து யுத்தத்தால் அவலப்பட்ட மக்களுக்கு தனது சேவையினை வழங்கவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

1995ஆம் ஆண்டுக்கு பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களினால் கொழும்புக்கு இடம்பெயர்ந்த வைத்தியர் அங்கிருந்தவாறு, தன்னால் முடிந்த சேவையினை அனைத்து தரப்பினருக்கும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts