Ad Widget

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் அதிகாரிகள் நியமனம்!

யாழ். பகு­திக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக (எஸ்.எஸ்.பி) சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.யூ. விஜித குண­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மை­யாற்­றிய ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்­வு­ பெற்­றதைத் தொடர்ந்து வெற்­றி­ட­மான இடத்­துக்கே விஜித குண­ரத்ன இவ்­வாறு நிய­மிக்­கப்பட்­டுள்ளார்.

அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மை­யாற்றி வந்த நிலை­யி­லேயே நேற்று முன்தினம் இரவு முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக விஜித குண­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தக­வல்கள் கேச­ரிக்கு தெரி­வித்­தன.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக , பொலிஸ் ஆணைக்குழு இந்த நிய­ம­னத்தை வழங்­கி­யுள்­ளது.

குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெறும் திட்­ட­மிட்ட குற்­றங்கள், சமூக விரோத செயற்­பா­டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்­ளிட்ட பிர­தான குற்­றங்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் பொறுப்­புடன் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் குண­ரத்ன யாழுக்கு அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

அட்டன் பகு­தியில் தமிழ் பேசும் மக்­க­ளுடன் இணைந்து சேவை­யாற்­றிய அனு­ப­வமும், குற்­றங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் சிறப்புத் தேர்ச்­சியும் உள்ள அதி­கா­ரி­யாக கரு­த­ப்படும் விஜித்த குண­ரத்ன, சினே­க­பூர்வ சேவையை முன்­னெ­டுப்­பது தொடர்பில் யாழுக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் விஜித குண­ரத்­ன­வுடன் சேர்த்து சேவை அவ­சியம் கருதி மேலும்
5 உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்­க­ளுக்கும் இட­மாற்றம் வழங்கப்­பட்­டுள்­ளது. நிக்­க­வ­ரட்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் அனுர தெல்­க­ஹ­பிட்­டிய பிர­தமர் பாது­காப்பு பிரி­வுக்கும், புத்­தளம் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் எம்.எஸ்.கே.எஸ். டி சில்வா ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரி­வுக்கும் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­விட மொனரா­கலை உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கிளமன்ட் பெர்னாண்டோ பாணந்­து­றைக்கும், கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் அமரதுங்க மொனராகலைக்கும் இடமாற் றப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய பியசேகர நுகேகொடை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சராக இடமாற்றப்பட்டுள்ளார்.

Related Posts