Ad Widget

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னத்தை இடைநிறுத்தியது வடக்குமாகாணசபை!

வடக்கு மாகா­ணத்­தில் 182 தொண்­டர் ஆசி­ரி­யர்­களை மட்­டும் ஆசி­ரி­யர் சேவைக்­குள் உள்­ளீர்ப்­ப­தற்கு கொழும்பு கல்வி அமைச்­சால் வழங்­கப்­பட்ட அனு­மதி தொடர்­பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்­னரே அவர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண சபை­யின் 107ஆவது அமர்வு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த அமர்­வில் வடக்கு மாகாண முன்­னாள் கல்வி அமைச்­சர் குரு­கு­ல­ ராஜா, “தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­ம­னத்­தில் குள­று­ப­டி­கள் உள்­ளன.
நிய­ம­னம் வழங்­கு­வது என்­றால் அனைத்து தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் வழங்­கப்­பட வேண்­டும்” என வலி­யு­றுத்தி கவ­ன­வீர்ப்பு பிரே­ர­ணையை கொண்டு வந்­தார்.

அவ­ரின் பிரே­ரணை தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது. உறுப்­பி­னர்­கள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­த­னர்.

“மாகா­ணத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிரந்த நிய­ம­னத்தை இடை­நி­றுத்த வேண்­டும் என்ற முன்­னாள் கல்வி அமைச்­ச­ரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அனை­வ­ருக்­கும் நிய­ம­னத்­தை­யும் வழங்­கு­வது தொடர்­பாக ஆரா­யப்­ப­ட­வேண்­டும். நிய­ம­னம் வழங்­க­ளில் தக­வல் திரட்டு புத்­த­கத்தை கருத்­தில் எடுக்­காது விடு­வது தொடர்­பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. எனவே இந்த நிய­ம­னத்தை இடை­நி­றுத்தி வைப்­ப­து­டன் இது தொடர்­பாக முழு­மை­யாக மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்ட பின்­னரே நிய­ம­னங்­களை வழங்­கு­வது” என வடக்கு மாகாண சபை­யால் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

Related Posts