- Saturday
- May 16th, 2026
உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலை நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 20 உள்ளூராட்சி மன்றங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களில் நியமிக்கப்படவிருந்த 8356 உறுப்பினர்களின் எண்ணிக்கை...
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் காணப்பட்ட அரச மரம் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படையினரால் பாரிய குழியினை ஏற்படுத்தி, அரச மரம் பாதிக்கப்படாத வகையில் அதனை நகர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் இந்த அரச மரம் வேறொரு இடத்தில் வைக்கப்படலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்....
முன்னாள் போராளிகள் இராணுவத்தில் இணைந்து கொள்வது மாவீரர்களுக்கும் அவர்களினது தியாகங்களுக்கும் செய்கின்ற துரோகமாகவே அமையும் என்றும் அவ்வாறான துரோகத்தை முன்னாள் போராளிகள் இழைக்க மாட்டார்கள் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
முல்லைத்தீவு – நித்தகைக்குளத்தையும் அதனோடு இணைந்த வயற்காணிகளையும் விடுவித்துத் தருவதுடன், வயற்காணிகளுக்கு செல்வதற்கான வீதியினையும் மறுசீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக தெரியவருகையில், நித்தகைக்குள விடுவிப்பு மற்றும் வீதி மறுசீரமைப்பு போன்றவை தொடர்பான கோரிக்கையொன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் குமுழமுனை கிழக்கினுடைய கமக்கார அமைப்பினரின் அழைப்பை ஏற்ற...
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. “இதன்பிரகாரம், மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, தொலைநகல் (பெக்ஸ்) இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படமாட்டாது” என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் பயிற்சியின் கீழ் மற்றுமொரு பெறுமதிமிக்க வெற்றியினை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டுகளாக 3 வகை கிரிக்கெட்டிலும்பெரும் பின்னடைவை சந்திந்து வந்த இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் தலைமைப் பயிற்சியின் கீழ்...
தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பாதகமான நிலையை தோற்றுவிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அரசியல் நகர்வுகளை கூட்டமைப்பு நிதானமாக அவதானித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுபினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்படி...
4 கிலோ கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். யாழ். சாவகச்சேரி கோவிலாக்கண்டி பகுதியைச் சேர்ந்த இவர் 5 இலட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கேரளா கஞ்சாவினை...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொது நோக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் இறுதி யுத்தத்தின் பின்னர் பல வாழ்வாதார நெருக்கடிகளை...
உள்ளக விசாரணையினை வலியுறுத்துகின்ற 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு https://youtu.be/WCJ_XtPky2E ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய...
விளையாட்டுப் போட்டிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரம் அல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. வெற்றியைக்கண்டு துள்ளாமலும் தோல்வியைக்கண்டு துவழாமலும் வெற்றியையும் தோல்வியையும் ஓரே மாதிரி நோக்கும் மனப்பாங்கைச் சிறு வயதில் இருந்தே வளர்த்தெடுப்பதற்கு விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இல்லாதவர்கள் எந்தக் குறுக்கு வழியிலேனும் வெற்றியை அடையத் துடியாய்த்...
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே மஹிந்த ராஜபக்ஷ குறித்த அழைப்பினை விடுத்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
யாழில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவரை, கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதி திருநெல்வேலி – நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச் சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குளி பகுதியைச் சேர்ந்த...
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுவேளை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் வந்த மோட்டர் சைக்கிளில் சென்றவரை மறித்துச் சோதனையிட்டபோதே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்தி...
இரண்டு வருட கால அவசாகத்தை உடன் நிறுத்தி இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு மாற்றுங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்துப் போராட்டத்துக்கு அழைப்பு https://youtu.be/LFw80_Fw7yI ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் தமது எதிர்கால செயற்பாடுளை தெளிவுபடுத்தும் முகமாகவும் ஓர் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிக்கை வருமாறு..... நன்றிநவிலல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய...
அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம் எனவும் இரண்டு தலைவர்கள் இருப்பதனால் நல்லாட்சி பயணத்திற்கு பாதிப்பு இல்லை...
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ். ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால் 109 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்போது யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றினால் 79 மீனவர்களும் யாழ். பருத்தித்துறை நீதிமன்றினால் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். தமிழகம் இராமநாதபுரம்,...
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூறமுற்படலாம். ஆனால் சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உறுப்பு நாடுகள் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மனித...
ஆங்கிலப் பத்திரிகையொன்றில்நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியிருந்த, “போக்குவரத்து வசதி இல்லாமையினால் நாள்தோறும் 24 கி.மீ. தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்” எனும் செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டது. இதனால் அவருடைய ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவினது தலையீட்டின் காரணமாக அந்த மாணவர்களினதும்...
Loading posts...
All posts loaded
No more posts
