Ad Widget

வாக்குறுதிகளிலிருந்து அரசாங்கம் தப்பிக்க இடமளியாதீர் : ஜெனிவாவில் சுமந்திரன்

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூறமுற்படலாம். ஆனால் சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உறுப்பு நாடுகள் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவிலுள்ள பிரித்தானிய மிஸன் பணிமனையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பங்கேற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். மனித உரிமைப் பேரவையின் 26 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 40 பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கை விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக வியூகம் வகுக்கும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இரண்டுமணி நேரம் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்துவெளியிடுகையில்,

“2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில விடயங்கள் தவிர ஒன்றும் நடைமுறைக்கு வரவில்லை.

காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் அது நடைமுறைக்கு இன்னமும் வரவில்லை. அரசாங்கத்தின் வேகம் போதாது இருக்கின்ற ஒருவருட காலப்பகுதியில் அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவேண்டும்​. ​

செய்வதாக ஏற்றுககொண்டதில் வேகம் இல்லை தேர்தல் முடிவுகளை வைத்து இவற்றை செய்ய எதிர்ப்பு உறுப்பு நாடுகள் முழுவதும் நிறைவேற்றப்படவேண்டும். அரசியல்மைப்பு உருவாக்க சொல்லக்கூடும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் முன்னேற்றம் இல்லை மிகத்துரிதமாக சேர்ந்து வலியுறுத்தவேண்டும்.

அரசாங்கம் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் செய்வதாக கூறிய விடயங்கள் பலவற்றில் காத்திரமான முன்னேற்றம் கிடையாது. அரசியல் யாப்புஉருவாக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இங்கு வந்து அரச தரப்பினர் கூறக்கூடும். ஆனால் அது முழுமை பெறவில்லை. நல்லிணக்கம் விடயத்தில் சில நகர்வுகள் எடுக்கப்பட்டாலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.

இந்தவிடயங்களில் அரசாங்கம் தானே முன்வந்து ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது எனக் கூறக்கூடும்.

ஆனாலும் முழுமையாக ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இதன்போது நாடுகளின் பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதனைத் தவிர ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக இரு சந்திப்புக்களை நடத்தி நிலமையை விளக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts