Ad Widget

முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொது நோக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் இறுதி யுத்தத்தின் பின்னர் பல வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலையை ஆராய்ந்து தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இந்த விசேட கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts