Ad Widget

இலங்கை 3 வகை கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் : இருபதுக்கு 0-20 கிண்ணத்தையும் கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் பயிற்சியின் கீழ் மற்றுமொரு பெறுமதிமிக்க வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டுகளாக 3 வகை கிரிக்கெட்டிலும்பெரும் பின்னடைவை சந்திந்து வந்த இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் தலைமைப் பயிற்சியின் கீழ் இலங்கை அணி மீண்டெழுந்து 3 வகையான கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதன்படி பங்களாதேஷில் இடம்பெற்ற சிம்பாப்வே, பங்களாஷே் மற்றும் இலங்கை அகிய அணிகளுக்கிடையிலான மும்முனைத் தொடரில் இலங்கை அணி சம்பியன் ஆகியதுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 1-0 எனவும் தற்போது இடம்பெற்று முடிந்த இருபதுக்கு – 20 தொடரை 2-0 எனவும் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதுடன் புதிதாக தலைமைப் பயிற்சியாளராக கடமையேற்றுள்ள ஹத்துரு சிங்கவின் பயிற்றுவிப்புக்கும் கிடைத்த பெரும் வெற்றியென்றும் சொல்லமுடியும்.

இந்நிலையில் பங்களாமேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று 2 ஆவதும் இறுதியுமான போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களைப்பெற்று பங்களாதேஷ் அணிக்கு 211 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை அணிசார்பாக அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் 70 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 42 ஓட்டங்களையும் அதிரடியாக ஆடிய சானக்க 11 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசினார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஜயிட், ரஹ்மான், சர்க்கார் மற்றும் சைபுதீன் ஆகிகோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

211 என் இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப்பெற்று 75 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக மஹமதுல்லா 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் குணதிலக மற்றும் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த வருடம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியை படுதோல்வியடையச் செய்த பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இலங்கை அணி இத் தொடரின் மூலம் சரியான பாடத்தை புகட்டிள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts