- Saturday
- May 16th, 2026
கடந்த காலத்தில் பயங்கர குற்றங்களுடன் தொடர்புபட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 150 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச காவல் துறையின் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட...
மன்னார் மாவட்டம் தேசியக் கட்சியொன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தமிழ் தலைமைளும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் முடிவு பற்றிக் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் பிரிதிநிதிகளிடமும் உள்ள ஒற்றுமையீனம் காரணமாகவே...
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார். முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) என்பவரே இன்று (வியாழக்கிழமை) நாடு கடத்தப்பட இருக்கின்றார் என அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார்...
முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில்...
மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள்...
சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்துவரும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள்...
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காததால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். யாழில். உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னதாக, மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்த போது அவர் அங்கிருந்தவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார். யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகியதால், அவர்...
யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டின் சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு...
வவுனியா - சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி இதனை ஒத்திகை பார்க்கும்...
பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதிபர் ஆசிரியர்களுக்கு பாடமாக அமையவேண்டும் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி...
யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்குப் பயணித்த தனியார் பஸ் தீவிபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் இராணுவத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. தியதலாவ, கஹகொல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயால் விபத்து இடம்பெற்றது. அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்”...
தாமரை மொட்டிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்ததன் பின்னணியில் நாமல் இந்த கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து நாமல் தனது...
கடலில் புயலில் சிக்கி உயிர் பிழைத்த மன்னார் மீனவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இராமநாதபுரம் ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து முகாமில் வசித்து வந்த அவரை மீண்டும் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். மன்னார் – பேசாலை முருகன் கோவில் பகுதியை...
நேற்று (20-02-2018) இடம்பெற்ற ஊழியர்சங்க பொதுக்கூட்டத்தில் எமது கோரிக்கைக்கு அமைவாக நேர்முகத் தேர்வானது ஒத்திவைக்கப்படாது குறித்த தினங்களில் (21, 22 பெப்ரவரி 2018) நடாத்தப்படுமானால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. நேற்று மாலை வரை யாழ் பல்கலை நிர்வாகத்தினால் எந்தவித சாதகமான பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக எமது கோரிக்கையினைப் புறந்தள்ளி நேர்முகத்தேர்வுகளை...
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாக்குறுதி அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த “அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் வடக்கு மாகாண பட்டதாரிகள் அரசாங்கம் இரு வாரகாலப்பகுதிக்குள் தமது நியமனம் தொடர்பில் நடவடிக்கை ஏதும் எடுக்காதுவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். நூற்றுக்கணக்கான வடக்கு மாகாண பட்டதாரிகள் நேற்று முன்தினம்...
நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில் காலைவேளைகளில் உறைபனிநிலவக்கூடும். வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும். நாட்டின் சில இடங்களில்...
மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர்....
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ். நகரப் பகுதியில் உள்ள யூ.எஸ். விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே...
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றுத் தருவேன்....
Loading posts...
All posts loaded
No more posts
