நிலவும் அதிக வரட்சி காரணமாக கண்களுக்கு பாதிப்பு!!!- வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளியினால் இதுவரை 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளதாக கட்புல மருத்துவநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். அனுராதபுரம், புத்தளம், பொலநறுவை, மன்னார், மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்திலேயே மிகவும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். எனவே கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் கண்ணாடிகளை...

கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும்...
Ad Widget

வாள் வெட்டுக்கு இலக்கான யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்...

“காணாமல் போனோர்” சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வு எதிர்வரும் 26ம்திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே, இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக...

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி உனா மக்கோலி திடீர் மரணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிவந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர...

செம்மணி பிள்ளையார் ஆலயம் உடைப்பு!

யாழில் இந்து ஆலயம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏழாலையில் குடும்பப் பெண் மரணம் தொடர்பில் சந்தேகம்!!

யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். ஏழாலை பகுதியில் வசித்துவரும் திருமதி அனுஷா பாலகிருஷ்ணன் எனும் பெண்மணி யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா அனுப்பிவிட்டு தான் மாத்திரம்...

யாழ். வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் : முதலமைச்சர் சி.வி. திறந்து வைப்பு

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கட்டிடத் தொகுதியை திறந்துவைத்தார். மத்திய அரசின் மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபா நிதியில் வடமாகாண சுகாதார அமைச்சினால் இந்த கட்டடம்...

மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்தவர் தீயில் எரிந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுமலை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது அது திடீரென தீப்பற்றியதால் அந்நபர் உயிரிழந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஆறுமுகம், துரைராஜா என்ற 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையெ உயிரிழந்துள்ளார். நீர் இயந்திரத்தை இயக்குவதற்காக மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது பெற்றோல் போத்தலில் தீப்பற்றி...

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் : சம்பந்தன்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)...

குண்டு வெடிப்புக்கு இராணுவ வீரர் காரணம்?

தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயர்...

இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை!: சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லையென சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் இலங்கையில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிராஜ் பட்நாயக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில்...

மஹிந்தவின் மீள் எழுச்சி எமக்கான எச்சரிக்கை : சிவமோகன்

மஹிந்தவின் மீள் எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

வடக்கில் மருத்துவ சேவைகள் இன்னும் பூரணத்துவம் அடையவில்லை : வடக்கு முதல்வர்

வடபகுதியில் பல்வெறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வவுனியா புளியங்குளம் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “வட...

முள்ளிவாய்க்காலை சுவீகரிக்க வந்தவர்கள் மக்களால் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால்...

யுத்தத்தை விட அதிகமான மக்கள் தற்போது இறக்கின்றனர்:ஆளுநர் குரே

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தில் இறந்தவர்களையும் விட அதிகமானவர்கள் தற்போது வீதி விபத்துகளில் இறக்கின்றார்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) யாழில் இடம்பெற்ற போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் வீதி விபத்துகள் சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், யுத்தகாலத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்காக பயங்கரவாதிகளையும்,...

டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுப் பதவிகளைக் கண்டு நாங்கள் அச்சம் கொள்ளவில்லை : மாவை

மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் பதவியை அவருக்கு கொடுக்கவிரும்பினால் கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவோமுடியும். அமைச்சராக இருந்த அவர் செய்யாததை நாங்கள் வெளியில் இருந்து செய்துள்ளோம் . அவரது அமைச்சுப் பதவிகளைக் கண்டு நாங்கள் அச்சம் கொள்ளவில்லை எனதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா...

கூட்டமைப்பு எம்.பிக்களின் இலஞ்ச விவகாரத்தால் சபையில் சலசலப்பு!

2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்....

வாசு­தேவ நாண­யக்காரவின் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த சுமந்­திரன்!

பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து செயற்­பட்­டன இது திட்­ட­மிட்ட சதி­யென கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்­வைத்த கோரிக்கை நியா­ய­மா­னது, சட்ட விதி­மு­றைக்கு ஏற்­ற­தா­கவே அமைந்­துள்­ளது என்று குறிப்­பிட்ட கூட்­ட­மைப்பின் எம்.பி. சுமந்­திரன் வாசு­தேவ...

சம்பந்தரின் தனி நாடு கருத்து தமிழர் நலன் சார்ந்ததல்ல- கஜேந்திரன்

மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையே என கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தாங்கள் கடந்த எட்டு வருடமாகக் கூறிவந்த...
Loading posts...

All posts loaded

No more posts