ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வு எதிர்வரும் 26ம்திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே, இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 மார்ச் 07ஆம் திகதி இந்தச் சட்டத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னர் ஜூலை 5ஆம் திகதியும் செப்ரெம்பர் 19ஆம் திகதியும் இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதும் பல்வேறு குழுக்களின் எதிர்ப்புகளால் அது கைவிடப்பட்டது.
வரும் திங்களன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த காணாமல் போனோர் பணியக சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளளமை சுட்டிக்காட்டத்தக்கது.