- Thursday
- May 14th, 2026
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவியை வழங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவித்தது. அதனால் அங்கஜன் இராமநாதனை பிரதி...
“கொக்குவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல் நடத்தியிருந்தனர்” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றுரைத்தார். “சம்பவத்தை ஊடகங்கள் அவதானித்து செய்தி...
018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம்...
இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார். அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை...
வடமராட்சி கிழக்கில் அத்துமீறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடற்தொழில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) பேரணி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள்...
இராணுவத்தை பிரிக்க நினைக்கும் வடக்கு முதல்வருக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவிலான ஒன்றிணைந்த எதிரணி கேள்வி எழுப்பியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகள் தேவை என்பதற்காக, ஆட்சியாளர்கள் விசாரணைகளை நடத்தமாட்டார்கள் என்று, ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கான வீடுகள் பறிபோனதா என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...
திருக்கோவில், தம்பிலுவில் பிரதேச சபைக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான...
வடக்கு – கிழக்கில் 9 மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. “நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 18ஆம் திகதி நடைமுறைக்கு வரும்” என ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஊர்காவற்றுறை மாவட்ட...
காரைநகர் பிரதான வீதியில் வலந்தலைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள காரைநகர் வரவேற்பு அலங்கார வளைவு இன்று சமய வழிபாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது. காரைநகர் வரவேற்பு வளைவு திறப்புவிழா நிகழ்வு காரைநகர் பிரதேச சபையின் ஜக்கியதேசியக்கட்சி உறுப்பினரான சுந்தேரஸ்வரன் கிருஷ்ணவரதன் தலைமையில் இடம்பெற்றது. திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், சிறப்பு...
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை மீன்பிடித் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் யாழ்.மாவட்டத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்து அரச அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். வடமராட்சி கிழக்கு மருதன்கேணி பகுதியில்,தென்னிலங்கை மீனவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று...
கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு, கவனிப்பின் பின்னர் ஒப்படைக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனைக்கோட்டை, ஆறுகால்மடப் பகுதியைச் சேர்ந்த ஆவா குழு இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் நேற்று முற்பகல் 11.30...
யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் அரைநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமே இந்த அரைநாள் கடையடைப்புக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை அழைப்புவிடுவித்தது. கட்சிகள், பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காமல் பகிரங்க அழைப்பாகவே இதனை விடுப்பதாக கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையிலேயே அரைநாள் கடையடைப்புக்கான...
யாழ்ப்பாணம்,வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதமான கடலட்டை தொழில்முறையை உடன் நிறுத்தி அதில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு வலியுறுத்தி இன்றைய தினம் யாழில் கதவடைப்பு இடம்பெறவுள்ளது. இச் சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி மாபெரும் கண்டனப் பேரணியும் இடம்பெறவுள்ளது. யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்...
வடமாகாண சபையின் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிச்சயம் க.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்க முடிவு செய்துள்ளீர்களா?என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த சுமந்திரன், கட்சியின் கொள்ளைகளை மறுதளித்து செயற்பட்ட...
6/2006 என்ற சுற்றறிக்கைக்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி வழங்கியது. இருப்பினும் அதனை இதுவரையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை...
அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத் திருப்பி அனுப்பியதைத் தவிர முதலமைச்சர் வேறு எதனையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள். உண்மையில், விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால், அரசுக்குச் சாமரம் வீசும் தமிழ்த்தலைவர்கள் முதலமைச்சர்...
காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் கூறப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை இரண்டு நாள்களின் பின் நேற்று தனியார் வைத்தியசாலையில் மீளவும் சேர்க்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு தனியார் வைத்தியசாலையில்...
மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த...
தேர்தல் காலத்தில் தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ்.முற்றவெளியில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியினைத் மொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தலமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்...
Loading posts...
All posts loaded
No more posts
