6/2006 என்ற சுற்றறிக்கைக்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி வழங்கியது. இருப்பினும் அதனை இதுவரையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.