குடத்தனையில் கொலைவெறித் தாக்குதல்! ஒருவர் சாவு! மூவர் படுகாயம்!!

பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்துள்ளார். பின்னர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின்...

யாழ்.சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை முயற்சி!

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குறித்த கைதி சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 23 வயதான இராஜேஸ்வரன் கஜன் என்பவரே தற்கொலை முற்சியில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைதி திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகத்தில்...
Ad Widget

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: மாவை சேனாதிராசா

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில்...

நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழுத்தம்

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் இதன்மூலம் இலங்கை மக்களால் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தம்முடைய பொறுப்புக்களை நிறைவேற்ற இடமளிக்குமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நிலைமைகளை கரிசனையோடு உற்றுநோக்கிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்...

பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அர்ஜுன் ரணதுங்க வருகை தந்ததையடுத்து இடம்பெற்ற அசம்பாவித நிலைமையைத் தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய...

ஒழுக்கமற்ற அரசியல் செயற்பாடுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டதாலேயே நீக்கினேன் – மைத்திரி

சனாதிபதி இன்று நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரை வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய...

மஹிந்த தலைமையில் விசேட கூட்டம் – நாளை புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள்...

மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் – சீ.வி.கே.சிவஞானம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை முதலமைச்சர்...

எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்!!- சம்பந்தன்

இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,...

மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவோம் – டக்ளஸ்

“நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது. மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து போரில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம்” இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்...

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி! – மஹிந்த ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் நீடித்த குழப்பநிலையின் உச்சகட்டமாக, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவுக்கு ஆதரவு – கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த...

முகமூடி அணிந்த குழுவினர் அட்டகாசம்: தாயும், மகளும் படுகாயம்

வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஐந்து பேர் கொண்ட குழு உட்புகுந்து, அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின்...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலை வேகமாக குறைந்து வருகிறது. 2018 ஒக்டோபர் 05 முதல் இன்று வரையான கடந்த 21 நாட்களில் ப்ரெண்ட் Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.47 டொலரில் இருந்து 76.77 டொலர் வரையிலும், OPEC Basket மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.09 டொலரில் இருந்து 75.04 டொலர்...

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எனினும், அரசியலமைப்பின்...

மஹிந்த பிரதமரானாலும் பொறுப்பு கூறலில் இருந்து விடுபட முடியாது – அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த இலங்கை தவற கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால...

மஹிந்தவை பிரதமராக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்....

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானது – ஐ.தே.க

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இருக்கும்...

ஒரு நாடு! ஒரு ஜனாதிபதி! இரண்டு பிரதமர்கள்!!

இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே...
Loading posts...

All posts loaded

No more posts