மஹிந்த தலைமையில் விசேட கூட்டம் – நாளை புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

Related Posts