நாங்கள் நல்லது செய்வதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர்!

முதலமைச்சரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வாராந்த கேள்வி பதில் பகுதி... மணலாற்றுக் காணி அபகரிப்புச் சம்பந்தமான இரண்டாம் கட்டுரை தாமதமாகின்றது. அதற்குப் பதிலாகப் பின்வரும் கேள்வியும் பதிலும் தரப்பட்டுள்ளன. இதுவே எனது முதலமைச்சர் காலத்தில் வழங்கப்படும் கடைசி பதிலாகும். தொடர்ந்து நான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் என்று வாசகர்களும் பத்திரிகைகளும் கேட்டால் அவ்வாறு எழுத சித்தமாயுள்ளேன்....

அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்பரவு பணிக்கு ஈடுபடுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம்...
Ad Widget

பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கமைய கலாசாலையில் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு நாட்டின் பல இடங்களிலிருந்து பல்வேறு தரப்பினர்களும் தங்களது ஆதரவுகளை...

யாழில் முதியவர்கள் மீது தாக்குதல்: நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை- அராலி...

யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருப்பதாகவும் கூறியே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த இடமாற்றம், வடமாகாண சிரேஸ்ட பிரதி...

கரவெட்டியில் மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!!

மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் பாக்கியராஜா (வயது – 63) என்பவரே தனது உயிரை மாய்த்தார். தந்தையில் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு...

தமிழ் மக்கள் மாற்று அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை – சட்டத்தரணி குமரகுருபரன்

தமிழ் மக்கள் மாற்று அரசியலை இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கடந்து காலங்களில் மாற்று அரசியலை மேற்கொண்டவர்கள் உடனடியாக தமிழ் மக்களினால் துாக்கி வீசியெறியப்பட்டமையை வரலாற்றில் காணக்கூடியதாக இருப்பதாகவும் சட்டத்தரணி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியல் தீர்மானம் தொடர்பில் அறிவிப்பதற்காக நேற்று முன்தினம் (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள்...

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகேகொட அநுல வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு...

விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற...

அரசியல் கைதிகளை விடுதலை: அரசின் இழுத்தடிப்பால் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளது – சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது என தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இவ்வாறான செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு...

கருணா, கே.பி.க்கு சுகபோகம்..! அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

கருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சிறு சிறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில்...

விக்னேஸ்வரனின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் – மஹிந்த

சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதேநேரம், இனவாதக் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு...

அவுஸ்திரேலியாவில் பாரிய வெடி விபத்து! இலங்கையர்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் கான்பராவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் சிறு தீக்காயங்களுக்கு...

வட்டுக்கோட்டையில் பயங்கரம்! கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை, மகள் வைத்தியசாலையில்!!

வட்டுக்கோட்டையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது , கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஏற்படும் அதிகரிப்பு அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று நாட்டில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பித்தேன்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்...

ஆவா குழு தொடர்பாக ஆளுநரின் கருத்தில் சந்தேகம்: சி.வி.விக்னேஸ்வரன்

ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை 3 மாதங்களுக்குள் ஒழிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை நேற்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆளுநரால் 3...

வத்தளையில் தமிழ் மொழி மூல பாடசாலையை நிர்மாணிக்க அனுமதி!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதற்கே...

வடபகுதியின் முதலமைச்சராக பணிபுரிந்துவருவது பலருக்கு இடைஞ்சல் – முதலமைச்சர்

காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடதிறப்புவிழா கசூரினா சுற்றுலா மையம்இ காரைநகர் 24.10.2018 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பிரதம அதிதியூரை குருர் ப்ரம்மா ...................... இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும்...

என்னை பழிவாங்குவதாக நினைத்து தமிழினத்தை பழிவாங்கி விடாதீர்கள்- முதலமைச்சர் உரை!

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று...
Loading posts...

All posts loaded

No more posts