- Friday
- May 8th, 2026
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் உள்பட அனைத்து அரச துறை ஊழியர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அரச நிர்வாக சேவை, பல்கலைக்கழக...
தொடருந்து இயந்திர இயக்குனர்களாக (சாரதிகள்) இராணுவ அணியை கடமைக்கு அமர்த்த போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி பிரகடனப்படுத்திய நிலையில் போக்குவரத்து அமைச்சு இந்த அனுமதியை ரயில்வே பொது முகாமையாளருக்கு வழங்கியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இயந்திர இயக்குனர்கள், கட்டுப்பாளர்கள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய அதிபர்கள்...
எமது கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர்...
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் அதற்கான பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பை...
மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞனின் வீட்டை சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர். மானிப்பாய் லோட்டன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். பேருந்து ஒன்றில் வந்த சுமார் 25இற்கும் மேற்பட்ட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அந்த...
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக, வடக்கு மாகாணத்தில், நாளைய தினம் மின்சாரம் தடைப்படவுள்ளது. நாளைய தினம் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில், மின்சாரம் தடைப்படவுள்ளதாக, இலங்கை மின்சார...
தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குனா்களான பாரதிராஜா மற்றும் அமீா் ஆகியாா் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். இந்த சந்திப்பு நேற்று மாலை ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பின்போது இரு இயக்குனா்களுக்கும் ஆளுநா் சுரேன் ராகன் நினைவு பாிசுகளை வழங்கினாா்.
இலங்கை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து செல்வதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வருடாந்தம் 3000 முதல் 3500 வரையான புதிய மார்பக புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 25 வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய தரவுகளின்படி, மார்பக புற்றுநோய் இலங்கை...
கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பதுடன் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. மீண்டும் உயிர்த்த...
2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் நாளை முதல் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக...
வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தை “மின் தகனம்” பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய கலந்துரையாடல் நாளைமறுதினம் (ஒக்.6) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது. வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மூளாய் வீதி ஸ்ரீகணேசா வாசிகசாலையில் இடம்பெறவுள்ளது. குழுவின் உப தலைவர் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபையின்...
வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள நேற்று (வியாழக்கிழமை) காலை நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்தனர். இதன்போது விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை மறுத்த அவர் கட்சி சார்பில்லாத...
யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி...
கடந்த மாதம் 20ம் திகதி மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேரடியாக கைது செய்யப்பட்ட அதிபர் நிமலன் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவருக்கான விளக்கமறியலை ஒக்டோபர் 15ம் திகதிவரை...
போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன.அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். மாற்றுவலுவுள்ளோருக்கான உணர்திறன் முறையுடனான செயற்கை கையினை உருவாக்கிய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியை சேர்ந்த பத்மநாதன் துசாபன் என்ற...
வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலால் உயிரிழ்ழந்த இரும்பக உரிமையாளரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறும் நிலையில் அவரது கொலையைக் கண்டித்தும் நீதிகோரியும் கோண்டாவில் உப்புமடப்பகுதியில் கடைகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே வன்முறைக் கும்பலின் தாக்குதலில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த சிவாஜிலிங்கம், தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் தமிழர்களை புறக்கணிப்பது...
பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் கொழும்பு கட்டுநாயக்க, கொழும்பு இரத்மலானை, மட்டக்களப்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்துடன் சேர்த்து தற்பொழுது நாட்டில் 5 சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க...
யாழ்ப்பாணத்தில் காணியற்றவர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இரட்டைத் தொடர்மாடிகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தனியார் ஒருவரால் புதிய மூர் வீதியில் அமைந்துள்ள காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதிலேயே இந்த இரட்டை தொடர்மாடிகளைக் கொண்ட 250 குடியிருப்புகளை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ளக...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம்...
Loading posts...
All posts loaded
No more posts
