Ad Widget

பலாலி விமானநிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம்!

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கொழும்பு கட்டுநாயக்க, கொழும்பு இரத்மலானை, மட்டக்களப்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்துடன் சேர்த்து தற்பொழுது நாட்டில் 5 சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமன சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகிதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts