Ad Widget

ரயில் சேவையை நடத்த இராணுவத்துக்கு அனுமதியளித்தார் அமைச்சர்

தொடருந்து இயந்திர இயக்குனர்களாக (சாரதிகள்) இராணுவ அணியை கடமைக்கு அமர்த்த போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி பிரகடனப்படுத்திய நிலையில் போக்குவரத்து அமைச்சு இந்த அனுமதியை ரயில்வே பொது முகாமையாளருக்கு வழங்கியுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இயந்திர இயக்குனர்கள், கட்டுப்பாளர்கள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய அதிபர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் கடந்த 12 நாள்களுக்கு மேலாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தொடருந்து சேவைகள் முடங்கியதால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Related Posts