- Thursday
- May 7th, 2026
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் வீடியோ எடுத்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை...
முக்கிய நியமனங்களின் போது திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ’13...
உறுப்பினர்களுக்கு தொலைபேசி படி வழங்க வேண்டும் என சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 16 மாதங்களுக்கு பின்னர் தீர்மானம் ஒன்று முன் மொழியப்பட்டு, சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படியில் 6000 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. (உறுப்பினரின் சம்பளம் 20, 000 ரூபாய் அத்துடன் தொலைபேசி படி 6,000 ரூபாய். என 26,000 தற்போது வழங்கப்படுகின்றது)...
யாழ் மாநகரசபையின் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டவேளையில் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் முழு வடிவம்.. கௌரவ முதல்வர் அவர்களே, ஆணையாளர், செயலாளர், கௌவர உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். கௌரவ முதல்வரின் அனுமதியுடன் நீங்கள் சமர்ப்பித்த பாதீட்டின் பிரகாரம் எனது வரவு செலவுத்திட்ட உரையினை நிகழ்த்துகின்றேன். யாழ்.மாநகர...
நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. மத்தியம் 2.30 மணியளவில் அவ் அமர்வு முடிவடைந்து உறுப்பினர்கள் வெளியேறும் போது யாழ்.மாநகர சபையின் பிரதான் வாசலுக்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் தலைப்பகுதியில் அடிபட்டு இரத்தம் வெளியேறிய...
சமுக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையப்படுத்திய நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இவ்வாறான மோசடிகள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலகுகடன் வழங்கப்படுவதாக தெரிவித்து, பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு கடன்வழங்குவதாக கூறி மக்களை சமுக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய வழியில் அணுகுகின்றவர்களிடம், மக்கள் தங்களது...
நடைபெற்று முடிந்த சனாதிபதித்தேர்தலை அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாற்றணி அரசியல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி முயற்சிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இணைவில் ஏற்பட்ட முரண்பாடுகளுடன் அமைதியாகியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சனாதிபதித்தேர்தலில் அனைவரது கவனமும் குவிந்திருநதது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்த நிலையில் வடக்கு...
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார். அமைச்சர்களின் விபரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதரம், அரச...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சர். நிமல்...
இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆள்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி...
அரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிக்கலவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று பிற்பகல் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்கும் DMC / Policy/ Requeriments...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக,...
வடக்கு மாகாண சபையின் பிரகடனத்துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (20.11.2019) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சி கார்த்திகைப் பூச்சூடி விருந்தினர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின்...
வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர். லலித் கமகே – மத்திய மாகாண ஆளுநராகவும் ராஜ கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநராகவும் வில்லி...
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில்...
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவரை பின்னால் பயணித்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையாகநேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று...
யாழ்ல் 16 வயது இளம் யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ் நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய இளம் யுவதி பேருந்துக்காக நேற்றுமுன்தினம்...
கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் இன்று (புதன்கிழமை) காலை காற்றில் 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக அந்த நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையான...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார். இந்த முடிவினை அவர் நேற்றே எடுத்திருந்த நிலையில், இன்று இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பிரதமர்...
Loading posts...
All posts loaded
No more posts
