Ad Widget

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

  1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி, பொருளாதரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சர்.
  2. நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்.
  3. ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்.
  4. தினேஸ் குணவர்தன – வௌிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சர்.
  5. டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்.
  6. பவித்திரா வன்னியாராச்சி – மகளீர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்.
  7. பந்துல குணவர்தன -தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.
  8. ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்.
  9. சமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்.
  10. டலஸ் அழகப்பெரும -கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
  11. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.
  12. விமல் வீரவங்ச -சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்.
  13. மஹிந்த அமரவீர -பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்.
  14. எஸ்.எம்.சந்திரசேன -சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்.
  15. ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்.
  16. பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

Related Posts