Ad Widget

யாழ் மாநகர சபை ஊழியர்களின் தொலைபேசிக் கட்டணம் 57 இலட்சம்??

உறுப்பினர்களுக்கு தொலைபேசி படி வழங்க வேண்டும் என சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 16 மாதங்களுக்கு பின்னர் தீர்மானம் ஒன்று முன் மொழியப்பட்டு, சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படியில் 6000 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. (உறுப்பினரின் சம்பளம் 20, 000 ரூபாய் அத்துடன் தொலைபேசி படி 6,000 ரூபாய். என 26,000 தற்போது வழங்கப்படுகின்றது)

அந்த நிலையில் சுற்று நிரூபம் கூறுகின்றது என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திற்கு முன்னரான சுமார் 16 மாதங்கள் வரை வழங்கப்படாத தொலைபேசி படி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கடந்த 8ம் மாதமளவில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் நிலுவை காசு என 96 ஆயிரம் ரூபாய் ஒரே தடவையில் வழங்கியுள்ளார்கள்.அவ்வாறாக சபையில் உள்ள 44 உறுப்பினர்களுக்கும் 42 இலட்சத்து 24ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்கள்.

பொதுவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் , அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கால பகுதியில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் சுற்று நிரூபம் கூறியதாக அதற்கு முன்னரான கால பகுதிக்கான படியை நிலைவை என போட்டு எடுத்து விட்டார்கள்.

சரி அவங்க கணக்கை 5 மில்லியன் ரூபாய் என விட்டாலும். மாநகர சபையால் எதிர்பார்க்கப்பட்ட வாடகை வருமானம் 217 மில்லியனாக இருக்கும் போது , 09 மாதம் வரையில் கிடைத்த வருமானம் 59 மில்லியன் ரூபாயாம். அப்ப மிச்ச காசு எங்கே ???

அதேபோல 2018ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வேலை கால தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால் 12 மில்லியன் ரூபாய் திறை சேரிக்கு திரும்பியுள்ளது. அதற்கு பொறுப்பாளி யார் ?

ஓய்வூதிய நிலுவை உள்ளவர்களுக்கு வழங்க என 60 மில்லியன் ஒதுக்கினால் 115 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. (சுமார் இரண்டு மடங்கு) எவ்வாறு அந்த கொடுப்பனவு அதிகரித்தது ? என மக்கள் கேள்வி எழுப்புவதோடு அண்மைக்காலமாக யாழ் மாநகர சபை மீது மக்கள் விசனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

???? ????? ??????? ?????? ????????? ??????????? ??????? ????? ?? ????????? ????????!!

Related Posts