தடையை மீறி யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை...

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது...
Ad Widget

ஜனாதிபதி கட்டாயப்படுத்தியும் வடக்கு ஆளுநர் பதவியை ஏற்க மறுத்துவிட்டேன் – முரளிதரன்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். நாட்டில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான ஒரு செயற்திட்டத்தை வழங்கினால், அதனை முன்னெடுப்போன் என்று ஜனாதிபதியிடம் திட்டவட்டதாகத் தெரிவித்துவிட்டேன்” இவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை நேற்றிரவு முரளிதரன் சந்தித்தார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர்...

கிளிநொச்சியில் நாய் இறைச்சி?

கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றையதினம் 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது....

மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை!

அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய பல்கலைக நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த ஒரு நிகழ்வையும்...

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்!

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 6...

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ராஜபக்சக்களின் அரசுக்கு ஒத்துழைக்கத் தயார் – கூட்டமைப்பு

இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி, காணி விடுவிப்பு, இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர்...

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த புதிய அரசாங்கம் ஆவன செய்யும் – சி.வி.விக்னேஷ்வரன்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு புதிய அரசாங்கம் ஆவன செய்யும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும்...

யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படுத்தும் பொலிஸார்!!

யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம்...

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!!

நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் 2019 நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்...

25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்!

யாழ். நல்லூர் பகுதியில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. குறித்த பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த...

பிரபாகரனின் பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழை். பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஆரம்பித்த மழை இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ச்சியாக பெய்வதால் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து...

அரியாலை வீட்டுக்குள் 8 இடங்களில் நிலத்தைத் தோண்டித் தேடுதல் ; சிக்கியவை என்ன ?

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அகழ்வுப் பணிகளைக் கைவிட்ட பொலிஸார்நேற்று மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து சென்றனர்....

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்!

நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு...

பிரதமரின் உத்தரவு – தமிழ் பெயர் பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டன

தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவைத் தொடர்ந்து அவை மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில இடங்களில் வீதிகளின் தமிழ் பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்டமை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் பிரதமர், இதுகுறித்து விசாரணையை நடத்துமாறும் குறித்த பெயர் பலகைகளை...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை!!

எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்ரமசிங்க,...

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள் – பொ.ஐங்கரநேசன்

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலைச் செய்யத் தவறிவிட்டனர். அஜித் ரசிகர்கள் அஜித்தைக் கொண்டாடுவதைப் போல, ரசிக மனோ நிலையில் சஜித்தைக் கொண்டாட வைத்துள்ளனர். விஜயகலா அம்மையார் இனிமேல் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்தான் தேசியத் தலைவர் என்றார். அவரை அடியொற்றி சஜித் பிரேமதாசா அவர்களை எமது தமிழ்த் தலைமைகள்...

கடற்படை, இராணுவ அதிகாரிகள் மீது விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி பணிப்பாளருக்கு இடமாற்றம்!!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், தாஜூதீன்் படுகொலை உள்ளிட்ட பெரும் குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடற்படை, இராணுவ அதிகாரிகள் மீதான முக்கிய குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்திவந்த மூத்த பொலிஸ் அத்தியட்சர்...
Loading posts...

All posts loaded

No more posts