Ad Widget

ஜனாதிபதி கட்டாயப்படுத்தியும் வடக்கு ஆளுநர் பதவியை ஏற்க மறுத்துவிட்டேன் – முரளிதரன்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். நாட்டில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான ஒரு செயற்திட்டத்தை வழங்கினால், அதனை முன்னெடுப்போன் என்று ஜனாதிபதியிடம் திட்டவட்டதாகத் தெரிவித்துவிட்டேன்”

இவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை நேற்றிரவு முரளிதரன் சந்தித்தார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பை ஏற்குமாறு முரளிதரனிடம் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார் என்று செய்தி வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தி தொடர்பில் கருத்துரைக்கும் போதே முத்தையா முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதியை நான் நேற்றிரவு சந்தித்தேன். அது உண்மைதான். வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார். எனினும் நான் அந்த வாய்ப்பை முற்றாக மறுத்துவிட்டேன்.

நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஏதாவது பணியிலிருந்தால் அதனை வழங்குமாறு ஜனாதிபதியிடம் நான் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்” என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார்.

Related Posts