- Thursday
- May 7th, 2026
இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன. அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கியுள்ள ஆனால் தற்போது பாவிக்காத பழைய சிம் அட்டைகள் இருந்தால் அவற்றை டிஅக்டிவேட் செய்து கொள்ளுங்கள்....
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் உறுப்புரை 70இன் பிரகாரம், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின்படிநேற்று (2) நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மீண்டும் 2020 ஜனவரி 3ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை, ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்த புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கிறோமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறிகாந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.தே.க.வின்...
வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை பொலிஸாருடன் இணைந்து செயற்பட வருமாறு புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மகேஷ் சேனாரத்ன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார். இவர், பொலிஸ் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்பம்...
சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தி...
காரைநகரில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ள நிலையில் பிரதேசத்தில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு சிரமதானப் பணியை நேற்று முன்னெடுத்தனர். காரைநகர் பிரதேசத்தில் அண்மைய நாள்களில் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியதாக 58 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். காரைநகரில் கடந்த ஆண்டுகளைவிட டெங்கு நோய்த் தாக்கம் இம்முறை அதிகரித்துக்...
யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிச் சந்தியில் சுற்றுக்காவல் பொலிஸார் விக்கெட் தடிகள் மற்றும் வயர்களுடன் நின்று வீதிச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த வீதிச் சோதனை நடவடிக்கை நேற்று (டிசெ.1) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி தொடக்கம் இடம்பெற்றது. கொக்குவில் பொற்பதிச் சந்தியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்...
கல்விப் பொதுதாராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 தனியார் பரீட்சாத்திகளாவர். பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன....
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. நாட்டின்...
கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நாடாளுமஎன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இடைக்கால அரசில் விவசாய இராஜாங்க அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தார். எனினும் அவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தரப்புகள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியனவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் அறவிடப்படும்...
கொடிகாம் மற்றும் வடமராட்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்ற முற்பட்டபோது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுதின நிகழ்வுகள் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று (புதன்கிழமை) நினைவுகூரப்பட்டு வருகிறது....
புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ‘பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி’...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது. அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்....
எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். அதனால் எமது மக்களின் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் இழப்புகளின் துயரங்கள் இருந்து வருகின்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவது ஒவ்வொரு சாதாரண குடி மக்களதும் ஆழ்மன விருப்பங்களாகும் என்பதுடன் அது அந்தக் குடிமக்களின் ஜனநாயக...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 573 குடும்பங்களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7...
புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்கள். 38 இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இணைக்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சர்கள் சமல் ராஜபக்ச- பாதுகாப்பு வாசுதேச- நீர்வழங்கல் காமினி லோகுகே – நகர அபிவிருத்தி மஹிந்தா யப்பா அபேவர்தன – நீர்ப்பாசன கிராமிய...
தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன்,...
Loading posts...
All posts loaded
No more posts
