சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்.
அமைச்சர்களின் விபரம்
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி, பொருளாதரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சர்.
- நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்.
- ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்.
- தினேஸ் குணவர்தன – வௌிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சர்.
- டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்.
- பவித்திரா வன்னியாராச்சி – மகளீர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்.
- பந்துல குணவர்தன -தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.
- ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்.
- சமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அமைச்சர்.
- டலஸ் அழகப்பெரும -கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.
- விமல் வீரவங்ச -சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்.
- மஹிந்த அமரவீர -பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்.
- எஸ்.எம்.சந்திரசேன -சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்.
- ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்.
- பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.