- Tuesday
- May 5th, 2026
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 51 வயதுடைய கம்பஹா, பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை...
அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றாலும், சுகாதார அமைச்சின் அனுமதியின் அடிப்படையில் மட்டுமே பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும்...
யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர். ‘சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு...
யாழ். மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டார். ‘சாவகச்சேரியில் இடம்பெற்ற வழிப்பறிக்...
நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. இதன்படி, இன்று முதல் நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை இரவு 10...
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்புக்கு வரும் பேருந்துகள் கொழும்புக்குள் பிரவேசிக்க...
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு...
யாழ்.மாவட்டத்தில் கொரோனாவுக்கு பின்னர் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் 7 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளை சந்தித்த வடமாகாண ஆளுநர் மாகாணத்தின் சுகாதார நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார். இதன்போதே...
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்த மோட்டார் சைக்கிள் வழிப்பறி சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கொள்ளைச் சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், 9 தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 9 தங்கச் சங்கிலிகளில்...
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தனது மூத்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர். 23, 24 மற்றும் 26 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று...
யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக...
இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த...
நாட்டின் வானிலையில் 'AMPHAN' சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'AMPHAN' என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.70 நு இற்கும் இடையில் வடமேற்கு வங்காள விரிகுடா...
விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்தார். பளையில் இன்று காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது. பளை – தம்பகாமம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரும் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வருமானத்தை இழந்த குடும்பங்களிற்கு வழங்கப்பட்டு வந்த 5,000 ரூபா கொடுப்பனவை ஜூன் மாதத்தில் வழங்குவதில்லையென அமைச்சரவை நேற்றையதினம் (20) முடிவு செய்துள்ளது. பொதுத் தேர்தல் வரவுள்ளதால் இந்த கொடுப்பனவை நிறுத்தும்படி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவு அரசியல் ஆதாயம் பெறும் நடவடிக்கையாக கருதப்படலாமென்பதால்,...
யாழில் சுகாதார விதிமுறைகளை காவல்துறையினர் தாம் பேண தவறியதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானது எனவும் , அவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை எனவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செயலாளர் உட்பட 11 பேரை தனிமைப்படுத்த வேண்டும் என கடந்த ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாண காவல்துறையினர் யாழ்.நீதவானிடம்...
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார். நான்கு நாள்கள் ஆகிய...
புதிய காணொலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை செயல்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படியாக புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை இடையே முதல் விசாரணை திட்டம் நேற்றையதினம் தொடங்கியது. அதன்படி, இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நேரலைக் காணொலி உரையாடல் (Video Conference) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக சிறப்பு...
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்...
Loading posts...
All posts loaded
No more posts
