உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடலில் எரிகாயம் ஏற்பட்டநிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாபோதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. சிறிலங்கா ரெலிக்கொம்மின் பகுதியளவாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் சீரா நிறுவனத்தினர் வீதியோரமாக கம்பங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி இன்று காலை...

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று(புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் எண்ணக்கருவுக்கு அமைய இராணுவ வீரர்களின் நிதிப் பங்களிப்பில் குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது. கணவன் விபத்தில் உயிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன்...
Ad Widget

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக...

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி – சித்த ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

கொரோனா வைரஸை தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என திருகோணாமலை – நிலாவெளியில் அமைந்துள்ள கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மஹாதேவன் நிரஞ்சன் தெரிவித்தார். உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினால்...

ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்துகொள்ள அழைப்பு

ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும் வரலாறு அதன் பக்கங்களில் பதிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இன்றளவிலும் சினிமாத்துறையை தொழில் மயப்படுத்த முடியாமல்...

யாழ்ப்பாணத்தில் டெங்கு அபாயம்; குடியிருப்புகளில் பரிசோதனை நடத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர் எஸ்.மோகனகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும்...

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமேரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை!!

எதிர்வரும் 30 நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனம் எடுக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் அமெரிக்காவின் நிதியுதவிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இழக்க வேண்டி வரும் என காலக்கெடுவிதித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்திலேயே...

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!!

ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி...

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த உளவுத்துறை பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச்...

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் 569 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.திருநெல்வேலியில் வீட்டுக்குள் புகுந்த முதலை! அலறியடித்து ஓடிய மக்கள்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி, முடமாவடிப் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் முதலை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பகுதியில் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய போதும் காலை 6 மணியளவிலேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். இந் நிலையில் குறித்த இடத்திலிருந்து முதலை இராமலிங்கம் வீதியில்...

யாழில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி சடலம் மீட்பு!!

யாழ், செம்மணிப்பகுதியில் ஏ9 வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏ9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை...

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு 3 நாட்கள்

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை...

பிரபாகரனுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த இந்திய மத்திய அமைச்சர்!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு,...

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 98 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத் தோட்டத்தில் கோரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால் அந்த இடத்தைச் சேர்ந்த 98 பேர் கடந்த மாதம் 22ஆம் திகதி பலாலி விமான படை முகாமின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில்...

விடுதலைப் புலிகளைப் போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் அழிக்க சிங்கள – தமிழ் சக்திகள் முயற்சி!!

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

வடக்கில் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தடுக்க முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்

வடக்கில் அவசியமற்று கூட்டம் கூடுவதை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தெள்ளது. நேற்றயதினம் மாலை இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த பல்வேறு கெடுபிடிகள் பொலிஸார் மற்றும் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோவிட் – 19 நோய்த்...

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் பாதிப்பு

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த...

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர்

யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு...
Loading posts...

All posts loaded

No more posts