Ad Widget

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 98 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத் தோட்டத்தில் கோரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால் அந்த இடத்தைச் சேர்ந்த 98 பேர் கடந்த மாதம் 22ஆம் திகதி பலாலி விமான படை முகாமின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 6 மாத குழந்தை இருவரும் 10 சிறுவர்களும் உள்ளடங்குவதாக விமானப் படையினர் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் ஊடாக கோரோனா தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று விடுவிக்கப்பட்டனர்.

பலாலி விமானப் படைத் தளபதி எயார் மார்சல் டி.எல்.எஸ்.டயஸ் சார்பாக பலாலி விமானப்படைத் தளபதி குறூப் கப்டன் எ.வி.ஜயசேகர, முன்னிலையில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு பேருந்து மூலம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Posts