Ad Widget

பிரபாகரனுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த இந்திய மத்திய அமைச்சர்!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் “1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன்.

வல்வெட்டித் துறையில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் பிரபாகரனுடன் பயணம் செய்தோம், அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் பலரும் அமைதி ஏற்பட துணையாக இருந்தனர்.

தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்த போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.

Related Posts